IND Vs WI T20: முதல் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி

eng vs ind first odi - 2026

இந்தியா மே.இ. தீவுகள் முதல் டி20 போட்டி

  • K.V. பாலசுப்பிரமணியம்

இந்திய அணி (190/6, ரோஹித் ஷர்மா 64, தினேஷ் கார்த்திக் 41, அல்சாரி ஜோசப் 2/46) மேற்கு இந்தியத் தீவுகள் அணியை (இருபது ஓவரில் 122/8, ப்ரூக்ஸ் 20, அர்ஷதீப் சிங், அஷ்வின், பிஷ்னோய் தலா 2 விக்கட்) 68 ரன் கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இந்திய அணியில் மூன்று ஸ்பின்னர்கள் இடம் பெற்றனர்.

ஹார்திக் பாண்ட்யா நன்றாக பேட் செய்வதோடு வேகப் பந்துவீச்சாளராகவும் செயல்படுவதாலும், ஜதேஜா ஸ்பின்னராகவும் அதிரடி மட்டையாளராகவும் இருப்பதால் இந்தியாவால் மூன்று சுழல் பந்து வீச்சாளர்களைத் தேர்வுசெய்ய முடிந்தது.

இந்திய பேட்டர்களில் ஷ்ரேயாஸ் ஐயர் (ரன் எதுவும் எடுக்கவில்லை), பாண்ட்யாவும் (1 ரன்) சரியாக விளையாடவில்லை. பிறர் சிறப்பாக ஆடினர். குறிப்பாக ரோஹித் ஷர்மா, 44 பந்துகளில் 64 ரன் எடுத்து 15ஆவது ஓவர் வரை ஆடினார்.

அதன் பின்னர் அடுத்த ஐந்து ஓவர்களில் 68 ரன் எடுத்த பெருமை தினேஷ் கார்த்திக்கையும் (41 ரன்) அஷ்வினையும் (13) சேரும். 20 ஓவர் முடிவில் இந்தியா ஆறு விக்கட் இழப்பிற்கு 190 ரன் எடுத்தது. பின்னர் ஆடவந்த மே.இ. தீவுகள் அணி இந்திய சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் வீழ்ந்தது.

அஷ்வின், பிஷ்னோய் தலா 2 விக்கட், ஜதேஜா ஒரு விக்கட் என ஐந்து விக்கட்டுகளை 12 ஓவர் வீசி 74 ரன்கள் கொடுத்து இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினர்.

மே.இ தீவுகள் அணியில் 20 ரன்களை எவரும் தாண்டவில்லை. கீமோ பால் தவிர எவரும் 20 பந்துகள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. முதல் எட்டு ஓவர் வரைக்கும் இந்திய அணியின் ரன் ரேட்டை ஒட்டி இருந்த மே.இ தீவுகள் அணியின் ரன் ரேட் அதன் பின்னர் அதல பாதாளத்தில் வீழ்ந்தது.

கடைசி ஐந்து ஓவர்களில் அவர்களுக்கு 93 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அவர்களால் 24 ரன் கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே அந்த அணி தோல்வியடைந்தது.

தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். ஐந்து ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories