காமன்வெல்த் போட்டிகள்: எட்டாம் நாளில்!

commonwealth games - 2026

காமன்வெல்த் போட்டிகள் – எட்டாம் நாள் – 05.08.2022

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஷரத் கமல் & அகுல ஸ்ரீஜா மலேசியாவின் லியாங்-சீ-ஃபெங் & ஹோ-யிங் ஜோடியை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினர்.

பின்னர் இந்த ஜோடி இங்கிலாந்து அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினர். மற்றொரு இந்திய ஜோடி மணிகா பத்ரா & சத்தியன் நைஜீரிய ஜோடியை எளிதில் வென்று காலிறுதிப் போட்டிக்கு நுழைந்தனர்.

அதன் பின்னர் இந்த ஜோடி காலிறுதிப் போட்டியில் மலேசிய ஜோடியிடம் தொல்வியுற்றனர். பெண்கள் ஒற்றையர் போட்டியில் ஸ்ரீஜா அகுலா, வேல்ஸின் சார்லோட்டை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

பின்னர் இவர் சைப்ரஸ் வீராங்கனையைத் தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் போட்டியில் சத்தியன் முதல் சுற்றில் வென்றுள்ளார். பெண்கள் இரட்டையர் போட்டியில் ஸ்ரீஜா & ரீத் டென்னிசன் ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றிருக்கிறது.

ஷரத் கமல் & சத்யன் ஞானசேகரன் ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. பாரா டேபிள் டென்னிஸ் – பாவினா ஹஸ்முக்பாய் படேல் இங்கிலாந்தின் சுயு பெய்லியை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். ராஜ் அரவிந்தன் அழகர் நைஹீரிய வீரரிடம் அரையிறுதியில் தோல்வியடைந்தார்.

லான் பவுல்ஸ் போட்டியில் இந்தியாவின் லவுலி சௌபே காலிறுதியில் தோல்வியடைந்தார். ஆண்கள் பிரிவில் இந்தியா கனடா அணியை 14-10 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்தது.

பின்னர் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடி 13-12 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது தீபக் புனியா (86 கிலோ), பஜரங் புனியா, (65 கிலோ) சாக்ஷி மாலிக் (62 கிலோ) மூவரும் இன்று வரிசையாக வெற்றிப் பெற்று இனி இறுதிப்போட்டியில் விளையாடி தங்கப் பதக்கம் பெற்றனர்.

அன்ஷு மாலிக், பெண்கள் 57 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பெண்கல் 68 கிலோ பிரிவில் திவ்யா கிரண் வெண்கலப் பதக்கம் பெற்றார். மோஹித் க்ரேவால் 125 கிலோ ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார். 4 x 400 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்றது.

பெண்கள் நீளத் தாண்டுதலில் ஆன்சி சோஜன் எடப்பில்லி முதல் சுற்றில் தேர்ச்சி பெறவில்லை. ஹிமாதாஸ் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் தகுதிச் சுற்றில் தோல்வியடந்தார்.

பாட்மிண்டன் பெண்கள் காலிறுதிப்போட்டியில் டிரீசா ஜாலி & காயத்ரி கோபிசந்த் புல்லேலா மொரீஷியஸ் ஜோடியை வென்று காலிறுதியில் நுழைந்தனர்.

ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இலங்கை அணியை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். பி.வி. சிந்து உகாண்டா வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

பெண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. பின்னர் ஷூட்அவுட்டில் 0-3 என்ற கணக்கில் தோற்றுப் போனது. இனி அந்த அணி நியுசிலாந்துடன் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தை ஆடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories