ENG vs NZ: வரலாற்றில் ஒரு அதிசயமான டெஸ்ட் போட்டி

Published:

IMG 20230301 WA0011 - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இங்கிலாந்து அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் நியூசிலாந்தில் வெல்லிங்க்டனில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்க்ஸை முதலில் விளையாடியது. முதல் நாளில் இங்கிலாந்து அணி 3 விக்கட் இழப்பிற்கு 315 ரன் எடுத்திருந்தது ஹாரி ப்ரூக்ஸ் 176 பந்துகளில் 186 ரன் (24 ஃபோர், 5 சிக்ஸ்) எடுத்து வரலாற்றில் இடம்பிடித்தார். ஜோ ரூட் தன் பங்கிற்கு 153 ரன் எடுத்தார். இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணி 87.1 ஓவர்களில் எட்டு விக்கட்டுகள் இழப்பிற்கு 435 ரன் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

அதன் பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 209 ரன் கள் எடுத்து ஃபாலோ ஆன் முறையில் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடியது. இரண்டாவது இன்னிங்க்சில் டாம் லேதம் (83 ரன்), கான்வே (61 ரன்), கேன் வில்லியம்சன் (132 ரன்), மிட்சல் (54 ரன்), டாம் பிளண்டல் (90 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 483 ரன் எடுத்திருந்தது.

நான்காம் நாள் 257 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸைத் தொடங்கியது. அன்றைய தினம், ஆட்டநேர முடிவில் ஒரு விக்கட் இழப்பிற்கு அந்த அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 48 ரன் எடுத்திருந்தது. வெற்றிக்கு இன்ன்மும் 210 ரன் தேவை. அந்த அணியிடம் 9 விக்கட்டுகள் இருந்தன. இங்கிலாந்து அணி இருக்கின்ற ஃபார்மில் அது எளிதாக வெற்றிபெற்றுவிடும் என அனைவரும் நினைத்தனர்.

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

ஐந்தாவது நாள் ஆட்டத்தில் முதல் இரண்டு மணி நேரத்திற்குள், நாலு விக்கட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 32 ரன் மட்டுமே எடுத்தது. முதல் இன்னிங்க்ஸில் சாதனை படைத்த ஹாரி ரூட் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். ஜோரூட் (95 ரன்), பென் ஸ்டோக்ஸ் (3 ரன்) ஆட்டத்தில் அந்த அணி 120 ரன் சேர்த்தது. அந்த நேரத்தில் ஸ்டோக்ஸ் 57ஆவது ஓவரிலும் ஜோரூட் 59ஆவது ஓவரிலும் ஆடமிழந்தனர். அப்போது வெற்றிக்கு55 ரன் தேவைப்பட்டது.

ஸ்டுவர்ட் ப்ராட், ஜேக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய மூவர் மட்டும் விளையாட வேண்டியிருந்தது. 71.3ஆவது ஓவரில் இங்கிலாந்து அணியில் கடைசி விக்கட் விழுந்தது. அதனால் அந்த அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஒரு ரன் வித்தியாசத்தில் ஒரு அணி மற்றொரு அணியை வெல்வது இது இரண்டாம் முறை. அதுவும் 30 ஆண்டுகளுக்குப் பின்னர். 1993ஆம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது.

ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

அதுபோல ஃபாலோ-ஆன் செய்த ஒரு அணி ஒரு மேட்ச்சை வெல்வது என்பதும் ஒரு அபூர்வமான நிகழ்ச்சி. இதற்கு முன்னர் 1894ஆம் ஆண்டு சிட்னியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை இவ்வாறு வென்றிருக்கிறது;

1981ஆம் ஆண்டும் மீண்டும் இந்த இரு அணிகளுக்கு இடையே நடந்த ஒரு போட்டியில் இந்த நிகழ்வு நடந்தது. மூன்றாவதாக நடந்த நிகழ்வை நாம் மறக்கவே முடியாது. இது கொல்கொத்தாவில் 2001ஆம் ஆண்டு நடந்தது. வி.வி.எஸ். லக்ஷமன் ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை 171 ரன் வித்தியாசத்தில் வென்றது.

லெக் சைடில் போடப்பட்ட அந்த பந்தை ஒரு வேளை அம்பயர் வைட் கொடுத்திருந்தால் மேட்ச் “டை’ அதாவது சமனில் முடிந்திருக்கும். இரண்டு ரன் எடுத்திருந்தால் இங்கிலாந்து வென்றிருக்கும். Yes, cricket is a game of glorious uncertainties.

Related articles

Recent articles

spot_img