IND Vs AUS 4th Test: இன்று ஆஸி.,க்கு சிறப்பான நாள்!

ஒரு நாளில் 250 ரன் என்பது டெஸ்ட் போட்டியில் ஒரு நல்ல ஸ்கோர். இதே வகையில் ஆடினால் முதல் இன்னிங்க்ஸில்

இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட்,
அகமதாபாத், முதல் நாள், 09.03.2023

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

அகமதாபாத்தில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 90 ஓவர் விளையாடி நாலு விக்கட் இழப்பிற்கு 255 ரன் ( உஸ்மான் க்வாஜா 104*, கிரீன் 49*, ஸ்மித் 38, ஹெட் 32, ஷமி 2/65, அஷ்வின் 1/57, ஜதேஜா 1/49) எடுத்தது.

முன்னதாக ஆஸ்திரேலியா இந்தியா இடையேயான 75 ஆண்டு கால கிரிக்கட் உறவைச் சிறப்பிக்கும் வகையில் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்களும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பீன்ஸ் அவர்களும் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு வந்தனர்.

இரண்டு அணிகளின் தலைவர்களுக்கும் தத்தமது நாட்டுத் தொப்பியை வழங்கினர். மைதானத்தில் உள்ள மக்களைச் சந்திக்கும் வகையில் மைதானத்தை இருவரும் சிறப்பு வாகனத்தில் சுற்றி வந்தனர். இரு அணிகளின் வீரர்களோடு இரு நாட்டுப் பிரதமர்களும் அரிமுகம் செய்துகொண்டனர். அவர்களோடு இணைந்து இரு நாட்டு தேசியகீதம் பாடினர்,

முன்னதாக ஐஷ்வர்யா மஜும்தார் ஒரு பாடலைப் பாடினார். அவரோடு நடனக் கலைஞர்கள் நடனமாடினர். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. அகமதாபாத் விளையாட்டுத் தளம் முந்தைய மூன்று விளையாட்டுத் தளங்கள் போல சுழல் பந்துவீச்சாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் இல்லை.

இது போகப் போக மாறி நாலாம் நாள், ஐந்தாம் நாளில் சுழலுக்கு உதவிசெய்யும். எனவே ஆஸ்டிரேலிய பேட்டர்கள் இன்று நிதானமாக ஆடி நல்ல ரன் சேர்த்துள்ளனர். ஒரு நாளில் 250 ரன் என்பது டெஸ்ட் போட்டியில் ஒரு நல்ல ஸ்கோர். இதே வகையில் ஆடினால் முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 400 ரன்கள் வரை எடுக்கலாம். இன்று கடைசி பத்து ஓவர்களில் கிரீன் தடாலடியாக ஆடி 49 ரன்கள் சேர்த்தார்.

ஆட்டநேர முடிவில் உஸ்மான் க்வாஜா 104 ரன் களொடும் கிரீன் 49 ரன்களோடும் விளையாடி வருகின்றனர். ஆஸிதிரேலிய அணிக்குச் சிறப்பான நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.