கிளாசிக் செஸ் தொடர்: ஆனந்த் தோல்வி

விளையாட்டு

images - 2026

கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் ஆனந்த் தோல்வி அடைந்துள்ளார்.

ஜெர்மனியின் கிரென்கே நகரில் கிளாசிக் செஸ் தொடர் (ஏப்.9 வரை) நடக்கிறது. இந்தியாவின் ஆனந்த், உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே) உள்ளிட்ட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதன் முதல் சுற்றில் ‘டிரா’ செய்த ஆனந்த், இரண்டாவது சுற்றில் பிரான்சின் மேக்சிம் வாசியரை எதிர்கொண்டார். இதில் தனக்கு பிடித்த கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கிய போதும், போட்டியின் 38 வது நகர்த்தலில், ஆனந்த் தோல்வியை ஏற்றுக் கொண்டார்.

இரு சுற்று முடிவில், ரஷ்யாவின் நிகிடா (2 புள்ளி), கார்ல்சன் (1.5) முதல் இரு இடத்தில் உள்ளனர். ஆனந்த் (0.5) 9வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.