டெஸ்ட் கிரிக்கெட்: 2-வது டெஸ்டில் வெற்றி பெறுமா இந்தியா?….. லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடக்கம்

01 Aug 09 Cricket - 2026இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகப் புகழப்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதனையடுத்து நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களில் கோஹ்லி மட்டுமே சிறப்பாக விளையாடினார். பந்து வீச்சாளர்களில் இஷாந்த் சர்மா, அஸ்வின், சமி ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இங்கிலாந்தை பொருத்தவரை பேட்டிங்கில் சொதப்பினாலும் அனுபவம் வாய்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராட், குரன் ஆகியோர் அசாத்தியமாக பவுலிங் செய்து விக்கெட்டுகளை எடுத்து வருகின்றனர்.

எனவே, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இன்றைய போட்டியில் இரண்டு ஸ்பின்னர்களை கொண்டு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி பொதுவாக அணியில் ஆல்ரவுண்டர்கள் பந்து வீசுகின்றனர். சிறப்பான பேட்டிங்கையும் வெளிப்படுத்துகின்றனர். இருப்பினும் விக்கெட்டுகள் விழுவதில் கடினமான சூழல் ஏற்படும்போது சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்களின் தேவை மிகவும் முக்கியமானது. தற்போது ஒரு சுழல் பந்து வீச்சாளர் உள்ளார். அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ALSO READ:  FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

இதற்காக, வேகப்பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவ் வெளியேற்றப்படலாம் எனத் தெரிகிறது. சுழற் பந்துவீச்சாளர்களில் அஸ்வினுடன், ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படலாம். இதில், 2014-இல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலுமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜடேஜா, 2-ஆவது இன்னிங்ஸில் 68 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.அதேவேளையில், குல்தீப் யாதவின் பந்து வீச்சை எதிர்கொள்ள இங்கிலாந்து வீரர்கள் ஏற்கெனவே டி20, ஒரு நாள் போட்டிகளில் தடுமாறியதால் அவரை அணியில் சேர்ப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இங்கிலாந்து அணியைப் பொருத்த வரையில், டேவிட் மலான் அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் வழக்கு விசாரணை காரணமாக இப்போட்டியில் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் ஆலிவர் போப், முதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் இறங்க உள்ளார். பென் ஸ்டோக்ஸுக்குப் பதிலாக, மொயின் அலி அல்லது கிறிஸ் வோக்ஸ் பிளேயிங் லெவனில் ஆடவுள்ளனர். இதனையடுத்து இன்று தொடங்கும் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories