14–வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வரும் 28–ந் தேதி முதல் டிசம்பர் 16–ந் தேதி வரை நடக்கிறது. 18 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணியை, ஹாக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து விலகிய சுனில், சீனியர் வீரர் ரூபிந்தர் பால்சிங் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
Popular Categories




