December 5, 2025, 9:05 PM
26.6 C
Chennai

Tag: சாதம்

ஆரோக்கிய சமையல்: சம்பா சாதம்!

சம்பா சாதம் தேவையானவை: வடித்த சாதம் – ஒரு கப், நெய் – கால் கப், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, முந்திரிப் பருப்பு – 10, மிளகு – சீரகப்பொடி – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் நெய் விட்டு, காய்ந்த பின் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி, மிளகு – சீரகப்பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் வடித்த சாதம், உப்பு சேர்த்து ஒரு சேர கிளறி இறக்கி, சூடாக பரிமாறவும்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை சாதம்

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த விழுது மற்றும் அரைத்த பொடியை போட்டு கலந்து பச்சை வாசனை போனதும் சாதத்தோடு கலந்து சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும் சுவையான கறிவேப்பிலை சாதம் தயார்.