December 5, 2025, 9:11 PM
26.6 C
Chennai

Tag: பொரியல்

ஆரோக்கிய சமையல்: அகத்திக்கீரை பொரியல்!

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் கீரையை போடவும். பிறகு மஞ்சள்தூள், பாசிப்பருப்பு சேர்த்து நீர் தெளித்து மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 5 நிமிடம் கழித்து மறுபடியும் நீர் தெளித்து வேக வைக்கவும். கீரை நன்றாக வெந்ததும், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஆவோ ஆவோ ஆலு டிஷ் காவோ !

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து… நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறத்தில் வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறியதும் உதிர்த்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்