
அகத்திக்கீரை பொரியல்
தேவையானவை:
அகத்திக்கீரை (நறுக்கியது) – ஒரு கப்,
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
கடுகு – கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
சர்க்கரை – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் கீரையை போடவும். பிறகு மஞ்சள்தூள், பாசிப்பருப்பு சேர்த்து நீர் தெளித்து மூடி வைக்கவும் (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்). 5 நிமிடம் கழித்து மறுபடியும் நீர் தெளித்து வேக வைக்கவும். கீரை நன்றாக வெந்ததும், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
அகத்திக்கீரை வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. உடம்பில் உள்ள கெட்ட நீரை எடுக்கும்



