ஆவோ ஆவோ ஆலு டிஷ் காவோ !

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
pototo - 2026

உருளைக்கிழங்கு மசாலா பொரியல்

தேவையானவை:

உருளைக்கிழங்கு – அரை கிலோ,

வெங்காயம் – 2,

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,

கடுகு – கால் டீஸ்பூன்,

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து… நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறத்தில் வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறியதும் உதிர்த்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

இது, எல்லா வகையான ‘வெரைட்டி ரைஸ்’, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள சிறந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.