December 5, 2025, 7:33 PM
26.7 C
Chennai

Tag: விண்வெளி

இணைய இணைப்பு, பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் செயற்கைக்கோள்… வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ!

ராக்கெட்டில் செலுத்தப்பட்ட 'சி.எம்.எஸ்-01' செய்கைக்கோள், தகவல் தொடர்பு வசதிக்கான 'சி பேண்ட்' அலைக்கற்றை பயன்பாட்டுக்காக

ககன்யான் திட்டத்திற்கு ஆட்கள் தேர்வு!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் பிரம்மாண்ட ககன்யான் திட்டத்திற்கு தற்போது ஆள் எடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு பெங்களூரில் தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்து இருக்கிறது. அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது.இந்த நிலையில் தற்போது இஸ்ரோவும் விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப முடிவெடுத்து உள்ளது. இஸ்ரோவின் இந்த திட்டத்திற்கு ககன்யான் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் விண்வெளியில் சென்று இந்திய வீரர்கள் மூலம் ஆராய்ச்சி நடத்தப்படும். ஆனால் விண்ணில் எங்கு எப்படி சென்று ஆராய்ச்சி செய்வார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் இந்தியா முதன்முதலாக மனிதர்களை சுயமாக விண்ணுக்கு அனுப்ப உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 3 பேரை விண்ணுக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் 3 பேர் ஏழு நாட்கள் விண்ணில் இருப்பார்கள். ஏழு நாட்கள் அவர்கள் விண்ணில் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள். யாரை விண்ணுக்கு அனுப்ப போகிறார்கள் என்பது குறித்தும் இவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இதற்கான தேர்வுதான் தற்போது பெங்களூரில் நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கான புகைப்படத்தை தற்போது இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய விமானப்படை வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ சோதனை தற்போது நடைப்பெற்று வருகிறது. அதன்படி பெங்களூரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோஸ்பேஸ் மெடிசின் அமைப்பில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அதன்பின் ரஷ்யாவில் முழுமையாக பயிற்சி அளிக்கப்படுவார்கள். அதன்பின் இவர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். ரஷ்யாவில் லியாசான் பயிற்சி மையத்தில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

விண்வெளி மையத்துக்கு தேவையான சாதனங்கள் இன்று போய் சேரும் – நாசா தகவல்

விண்வெளி மையத்துக்கு தேவையான சாதனங்களை டிராகன் விண்கலம் இன்று கொண்டு போய் சேர்க்கும் என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்லும்...

2 மாதம் படுக்கையிலேயே இருக்க முடியுமா? உங்களுக்கு காத்திருகிறது ரூ.12,84,640 சம்பளம்

விண்வெளி ஆராய்ச்சிக்காக நாசா, புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆராய்ச்சியில் பங்கு பெறுபவர்கள் 2 மாதம் சும்மாவே படுகையில் இருக்க வேண்டும். இதற்காக...