வெள்ளத்தில் 30 வீடுகள் அடித்து செல்லப்பட்ட பரிதாபம் !

தமிழகம் பொது தகவல்கள்

flood1 - 2026தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது களைக்கட்டத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் நீலகிரியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் மழை பெய்து வருகிறது.

இதனால் பொள்ளாச்சியில் பெரிய அளவில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. முக்கியமாக ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே இருக்கும் நாகரூத்து கிராமத்திலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த நாகரூத்து கிராமத்திற்கு ஒரு பக்கம் மலை இருக்கிறது. இதன் மீதும் ஒரு ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது. அதேபோல் கிராமத்திற்கு இன்னொரு பக்கமும் இன்னொரு ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது.flood 1 - 2026பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்திற்கான ஆறு இங்குதான் ஓடுகிறது. அதேபோல் மேலணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கும் இது வழியாகத்தான் தண்ணீர் செல்கிறது. இதுதான் நாகரூத்து கிராமத்தில் வெள்ளம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. இந்த திருமூர்த்தி அணை செல்லும் ஆற்றில் பெரிய அளவில் கடந்த வாரம் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அப்போது பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு அந்த ஆற்றில் ஒரே நேரத்தில் நிறைய மரங்கள் விழுந்து உள்ளது. இதனால் ஆற்றில் அதிக அளவில் பெரிய பெரிய மரங்களும், மணலும் விழுந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பு சுவர்களை மீறி ஆற்றில் இருந்து நீர் வடிந்து ஊருக்குள் வந்து இருக்கிறது. இதுதான் நாகரூத்து கிராமத்தில் வெள்ளம் ஏற்பட காரணம் ஆகும்.  வெள்ளம் ஒரே நொடி வந்து, அப்படியே பல வீடுகளை அடித்து சென்றுள்ளது. pollatchi - 2026வந்த வெள்ளத்தில் மொத்தம் 30 வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டது. அதேபோல் 1 குழந்தை நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தது. 12 பேர் இந்த வெள்ளத்தில் மோசமாக காயம் அடைந்தனர். எப்படி இந்த வெள்ளத்தை நேரில் பார்த்தவர்கள், எப்போதும் போலத்தான் மழை பெய்தது. ஆனால் திடீர் என்று வெள்ளம் ஏற்பட்டுவிட்டது. அதை நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. திடீர் என்று வெள்ளம் ஏற்பட்டதால் சுதாரிக்க முடியவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.