நண்பனின் மனைவியை நாடிய கணவன் ! அந்த போட்டோஸை நெட்டில் அம்பலப்படுத்திய மனைவி !

தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

intimate - 2026இருசக்கர வாகன விற்பனை செய்யும் முகவரான ரமேஷ் என்பவர் ராணுவ வீரர் ஒருவருக்கு, மோட்டார் பைக் ஒன்றை விற்பனை செய்துள்ளார். வியாபார அளவில் ராணுவ வீரருடன் தொடங்கிய பழக்கம் நாளடைவில் நண்பர்களாக இருவரையும் இணைத்துள்ளது.

ராணுவ வீரரின் நண்பராக மாறிவிட்ட ரமேஷ் அவரது மனைவியுடனும் நட்பாக பழகி  வந்தார். ராணுவ வீரர் நாட்டைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட அடிக்கடி எல்லைக்கு சென்று விடுவார். ராணுவ வீரர் பணி நிமித்தமாக சென்றுவிட அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஏற்கனவே திருமணமான ரமேஷ் ராணுவ வீரரின் மனைவியுடனான பழக்கத்தை மேலும் அதிகரித்துள்ளார்.mobile - 2026நாளடைவில் அவர்களது நட்பு கள்ளக் காதலாக மாறியுள்ளது. ரமேஷூம் ராணுவ வீரரின் மனைவியும் அடிக்கடி வெளியூர் செல்வதும் அங்கு அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருப்பதும் அதை தங்களது மொபைலில் புகைப்படம் எடுத்து வைத்து ரசிப்பதுமாக தங்கள் கள்ளக் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

ஒரு நாள் ரமேஷூம் ராணுவ வீரரின் மனைவியும் தனிமையில் இருக்கும் அந்தரங்க புகைப்படங்களை கணவரின் மொபைலில் பார்த்த ரமேஷின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். உயிருக்கு உயிராக நேசித்த கணவர் ரமேஷ் தனக்கு துரோகம் செய்து விட்டு வேறு ஒரு பெண்ணுடம் முறையற்ற வாழ்வு வாழ்ந்து வருகிறாரே என்ற மன வேதனையில் அவரது கணவர் ரமேஷும் ராணுவ வீரரின் மனைவியும் உல்லாசமாக இருக்கும் ஆபாசமான படங்களை சமூக வலைதளமான வாட்சப், பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பார்த்த அந்த பெண்ணின் நண்பர்கள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது ராணுவ வீரருக்கு தெரிய வர தன் மனைவி மீது அவதூறாக புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளதாக ரமேஷின் மனைவி மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் ரமேஷ் மனைவியிடம் விசாரித்ததில் பல உண்மைகள் வெளி வந்துள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.