3 வதுக்கு அடி போட்ட கணவன்! அடித்து நொறுக்கிய மனைவிகள்!

Published:

dhinesh 4 - 2026

கணவனை நடுரோட்டில் 2 மனைவிகள் அடித்த சம்பவம் பரபரப்பை தந்துள்ளது
.
சூலூர் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் அரங்க அரவிந்த தினேஷ். இவருக்கு 26 வயதாகிறது. ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

dhinesh 5 - 2026

இவருக்கு 2016-ம் ஆண்டு, பிரியதர்ஷினி என்பவருடன் திருமணம் நடந்தது. 15 நாளிலேயே பிரியதர்ஷினியை தினேஷ் அடி உதை என கொடுமைப்படுத்தி உள்ளார்.

பிரியதர்ஷினி மாமியார் வீட்டில் இதனைப் பற்றி சொல்லியும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால் பேரூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்த பிரியதர்ஷினி, திருப்பூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

dhinesh 2 - 2026

பிரியதர்ஷினி பிரிந்து போனதும், தினேஷூ மீண்டும் மாப்பிள்ளையானார். மேட்ரிமோனியலில் தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று சொல்லி இன்னொரு பெண்ணை தேடினார். கரூர் பகுதியை சேர்ந்த அனுப்பிரியா என்ற 23 வயது பெண்ணை கடந்த ஏப்ரல் 10-ம் தேதி கல்யாணம் செய்து கொண்டார்.

dhinesh 1 - 2026

ஒண்டிப்புதூரில் ஒரு வீட்டினை வாடகைக்கும் எடுத்து வசித்து வந்தார். ஒருசில மாதங்கள்தான் ஆயிருக்கும்.. அதற்குள் அனுப்பிரியாவையும் அடி உதை என கொடுமைப்படுத்திள்ளார் தினேஷின் இந்த செயலால் அனுப்பிரியாவும் கரூரில் உள்ள தாய் வீட்டிற்கே சென்றுவிட்டார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அனுப்பிரியா சென்றுவிட்டதால், மீண்டும் தினேஷ் புது மாப்பிள்ளையானார் அதனால் 3-வதாக கல்யாணம் செய்ய திரும்பவும் மேட்ரிமோனியலில் பெண் தேடினார். இதனை அறிந்த 2 மனைவிகளும் இதை பற்றி கேட்டதற்கு, அப்படித்தான் செய்வேன் என்ன பண்ணுவீங்க என்று வீம்பு பேசியுள்ளார்.

dhinesh 6 - 2026

இதனால், பிரியதர்ஷினி, அனுப்பிரியா இருவரும், நேராக தினேஷ் வேலை பார்க்கும் ஃபேக்டரிக்கு சென்றனர். அவரை பார்க்க வேண்டும் என்று சொன்னதற்கு, பேக்டரி தரப்பில் தினேஷை சந்திக்க அனுமதி தரவில்லை என தெரிகிறது. இதனால் இரு பெண்களும் பேக்டரி வாசலிலேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.

dhinesh 3 - 2026

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் 2 மனைவிகள் மற்றும் தினேஷை காவல்நிலையத்திற்கு வரும்படி கூறினார்கள். இதனால் காவல்நிலையம் செல்ல வெளியே வந்த தினேஷை காத்திருந்த 2 மனைவிகளும் தங்கள் ஆதங்கமும் ஆத்திரமும் தீர அடி பின்னி பெடல் எடுத்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

2 மனைவிகளிடமிருந்து தினேஷை காவல்துறையினர் மீட்டு சென்றனர். தங்களை ஏமாற்றிய தினேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனைவிகள் புகார் தந்ததையடுத்து, விசாரணை நடந்து வருகிறது.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

Related articles

Recent articles

spot_img