கணவனை இழந்த பெண் இரவில் செய்த செயல்.,!

தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
ootylake - 2026

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசித்து வந்தவர் நிர்மலா . 24 வயது நிறைந்த இவரது கணவர் மலர்வண்ணன். அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஹரிதா என்ற மகள் உள்ளார்.

கணவன் இறந்ததால் நிர்மலா தினகூலி வேலைக்கு சென்று தனது வாழ்வை நடத்திக்கொண்டு இருந்துள்ளார். மேலும் அவரது மகள் ஹரிதா தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தாள். போதிய வருமானம் இல்லாமல் சிறுமியின் படிப்புக்கும் மற்றவைகளுக்கும் துன்பப்பட்டுள்ளார்.

குழந்தையை எப்படி வளர்ப்பது, படிக்க வைப்பது என்பதை எண்ணி எண்ணியே நிர்மலா பெரும் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். சமீபத்தில் இரவில் நிர்மலா தனது மகள் ஹரிதாவை தூக்கிக்கொண்டு ஊட்டியில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளார். பின்னர் மகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து நேற்று காலை ஏரியில் அவர்கள் உடல்கள் மிதப்பதை கண்ட சிலர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.