இளைஞனுடன் காட்டுக்கு சென்ற பெண்! பின்னர் நேர்ந்த கொடூரம்!

கிரைம் நியூஸ் தமிழகம்
vankodumai 1 - 2026

காதலனுடன் காப்பு காட்டுக்குள் போன பெண்ணை, காதலனை அடித்து துரத்திவிட்டு வன்கொடுமைக்கு உட்படுத்திய 6 பேர் கொண்ட கும்பல் கைது!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சின்னமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ். 25 வயதாகிறது. ஒரு தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் டிரைவராக உள்ளார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும், கல்யாணம் ஆன 32 வயது பெண்ணுடன் தினேஷூக்கு உறவு ஆரம்பமானது.

இருவரும் விடுமுறை நாட்களில் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருப்பார்களாம். அப்படி நேற்று முன் தினமும் பைக்கில் நெய்யமலை காப்புக் காட்டுக்கு சென்றிருக்கிறார்கள். பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, இருவருமே ஆளில்லாத அந்த காட்டில் தனிமையில் இருந்துள்ளனர்.

love - 2026

திடிரென்று அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அடிவாரத்துக்கு வந்தது. யாருமே இல்லாத இந்த இடத்தில் பைக் நிற்பதைக் கண்டு சந்தேகமடைந்தவர்கள், காட்டுக்குள் சென்றனர். அந்த நேரம் தினேஷ் ஜோடி காட்டுக்குள் இருந்து வெளியே வந்துள்ளனர். அந்த பெண்ணைக் கண்ட அவர்கள் தினேஷை மிரட்டி அடித்து தாக்கியுள்ளனர்.

இதனால் தினேஷ் ஓடிவிட்டார். பிறகு 6 பேரும் அந்த பெண்ணை அதே காப்புக் காட்டுக்குள் தூக்கி சென்றனர். “என்னை விட்டு விடுங்கள்..” என்று அந்த பெண் எத்தனைக் கதறியும் 6 பேரும் கண்டு கொள்ளாமல், மாறி மாறி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

love - 2026

இதனிடையே தப்பி ஓடிய தினேஷ் அந்த பகுதியில் நடமாடி கொண்டிருந்தவர்களிடம் நிலைமையைக் கூறவும் அவர்கள் வந்துள்ளனர். ஆனால் அதற்குள் 6 பேரும் தப்பிவிட்டனர்.

இதுகுறித்து அந்த பெண் ஏத்தாப்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணையும் ஆரம்பமானது. இறுதியில் தலைமறைவாக இருந்த 6 பேரையுமே கைது செய்தனர். காப்புக் காட்டுக்குள் சென்ற பெண்ணை 6 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.