கொரோனா: சென்னைப் பகுதியில் பட்டியல்!

தமிழகம் பொது தகவல்கள்
pattiyal 1 - 2026

சென்னையில் மண்டல ரீதியாக எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 690 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் மண்டல ரீதியாக எத்தனை பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று (ஏப்.8) வெளியிட்டுள்ளது.

அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 4 பேருக்கும், மாதவரம் மண்டலத்தில் 3 பேருக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 12 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 40 பேருக்கும், திருவிக நகர் மண்டலத்தில் 22 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது.

அண்ணா நகர் மண்டலத்தில் 15 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 11 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 19 பேருக்கும், வளசரவாக்கம் மண்டலத்தில் 4 பேருக்கும் கரோனா பாதிப்பு உள்ளது.

ஆலந்தூர் மண்டலத்தில் 2 பேருக்கும், அடையார் மண்டலத்தில் 4 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 5 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களில் மணலி, அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் கொரோனா பாதிப்பு இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.