thukku 1
கோப்பு படம்

வயது முதிர்ந்த நண்பனுக்கு மகளை திருமணம் செய்து வைத்த குடிகார தந்தையால் விரக்தி அடைந்த மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த வடுகந்தாங்கல் இ.பி காலனியைச் சேர்ந்த சாந்தகுமார் – சம்பூர்ணம் தம்பதிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். தாய் சம்பூர்ணம் ஆறு மாதங்களுக்கு முன்பு மரணமடைந்த நிலையில் தந்தை சாந்தகுமார் குடிக்கு அடிமையானார்.

அதே பகுதியில் பழக்கடை நடத்தி வரும் சங்கரும் சாந்தகுமாரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். சாந்தகுமாரின் குடும்பத்திற்கு சங்கர் தன்னால் முடிந்த உதவிகளை அடிக்கடி செய்து வந்தார். சங்கருக்கு தற்போது 45 வயது என்றாலும் அவருக்கு திருமணம் ஆகாமல் இருந்து வந்தார்.

இதனால் தனது 20 வயது மகள் மகாலட்சுமியை கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சங்கருக்கு திருமணம் செய்து வைத்தார் சாந்தகுமார். வயதான ஒருவருக்கு தன்னை திருமணம் செய்து வைத்தால் மகாலட்சுமி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மே 1-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மகாலட்சுமி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கர் வீட்டுக்கு வந்து மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அந்த இடத்திற்கு வந்த போலீசார் மகாலட்சுமியின் சடலத்தை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இந்த விவகாரம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆன மூன்றே நாளில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பேசுபொருள் ஆகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending