
கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தானுக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடிய தேசவிரோத சக்திகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நேற்று முன்தினம் (18.7.2017) பாரத, பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் குழுக்களிடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்கு தமிழகத்தின் பல இடங்களில் முஸ்லீம்கள், `பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷமிட்டும், நள்ளிரவில் வெடி வெடித்தும் கொண்டாடியிருப்பது முஸ்லீம்களின் மனோபாவம் இன்னமும் மாறவில்லை என்பதை காட்டுகிறது.
இதனை எந்த முஸ்லீம் அமைப்புகளோ, நடுநிலை முஸ்லீம்களோ, முஸ்லீம் அரசியல் தலைவர்களோ, அரசியல் கட்சியினரோ கண்டிக்கவில்லை என்பதை பொதுமக்கள் கவனத்திற்கு இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது.
சமீபத்தில் வெளியிலிருந்து, சென்னை புழல் மத்திய சிறைசாலைக்குள் ஒரு பார்சல் வீசியேறிப்பட்டிருக்கிறது, அதில் பாகிஸ்தான் கொடிகள், செல்போன் போன்ற பொருட்கள் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகளான குற்றவாளிகள், சென்ற ஆண்டைப்போல தற்போதும் சிறை வார்டன்களை, அதிகாரிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அச்சுறுத்தியிருக்கிறார்கள்.
இதுவரை இது சம்பந்தமாக எந்த வழக்கும் தொடரப்படவில்லை, இந்த சம்பவங்கள் சம்பந்தமாக விசாரணைக்கும் உத்திரவவிடவில்லை. கோவை மத்திய சிறைசாலையில் அடைக்கப்பட்டிருக்கும் இடதுசாரி மாவோஸ்ட் நக்ஸல் பயங்கரவாதிகளை பார்ப்பதற்கு வந்த நக்ஸல் ஆதரவாளர்கள், முஸ்லீம்கள், அவர்களிடம் சிம் கார்ட், பென் டிரைவ் முதலானவை ரகசியமாக கொடுத்தப்போது மாட்டியுள்ளார்கள்.
இதிலிருந்து நக்ஸல் போன்ற நாசகார சக்திகளுடன் முஸ்லீம் அமைப்பினருக்கு தொடர்பு இருப்பது உறுதிப்படுகிறது.
இந்து முன்னணி, அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் செல்போனை செயலிழக்கச் செய்யும் அதிநவீன ஜாமர் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மேலும் சிறைச்சாலைகளிலிருந்து முஸ்லீம், நக்ஸல் பயங்கரவாதிகள் வெளி ஆட்களிடம் பேசுவதை உளவுத்துறை கண்காணித்து, பயங்கரவாதிகளின் ஆதவாளர்களை, வெளியிலிருந்து உதவி செய்பவர்களை, பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்களை அடையாளம் கண்டுகொண்டு, அவர்களின் சதி செயல்களை முழுமையாக முடக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
அதற்கு நவீன தொழில்நுட்ப கருவிகளை அளித்து காவல்துறைக்கு அளித்து, நவீன தொழில்நுட்பத்தை கையாளும் பயிற்சிகளையும் காவல்துறையினருக்கு தமிழக அரசு அளிக்க வேண்டும். இன்னமும் பழங்கால முறையில் காவலர்கள் கையில் லத்தியோடு, தகர டப்பா வைத்த சைக்கிளில் செல்லுவதைப் பார்த்தால், பரிதாபகரமாக இருக்கிறது. இதனாலேயே இஸ்லாமிய பயங்கரவாதிகள் துணிச்சலாக சிறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து, சட்டவிரோத சலுகைகளை பெற்று வருகிறார்கள்.
எனவே, `பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் போட்டு தேசவிரோதத்தைத் தூண்டிய முஸ்லீம்கள் மீதும், சிறையில் இருக்கும் முஸ்லீம் பயங்கர வாதிகளுக்கும், நக்ஸல் அமைப்பினருக்கும் உதவுவோர் மீதும் கடும் நடவடிக்கைகளை இன்னும் ஒருவாரத்திற்குள் தமிழக அரசு எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
அரசு மெத்தனமாக செயல்படுமேயானால், அடுத்த வாரம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாகிஸ்தான் கொடி எரிப்பு ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி நடத்தும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.



