மூடி கிடந்த தண்ணீர் டிரம்! 6 மாத குழந்தை இறந்து கிடந்த மர்மம்!

கிரைம் நியூஸ் தமிழகம்
dram baby

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த வேடியப்பன் – சோபனா தம்பதிக்கு சுதர்சன், தெய்வ தர்ஷினி என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், வேடியப்பன் இன்று காலை பணி நிமித்தமாக வெளியே சென்றுவிட்ட நிலையில், தாய் சோபனா பக்கத்துக்கு வீட்டினருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அதனையடுத்து, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 6 மாத பெண் குழந்தை மாயமாகியுள்ளது. இதனால் பதறிய சோபனா, அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து குழந்தையை தேடி பார்த்துள்ளார். ஆனால் குழந்தை எங்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், வீட்டிற்கு அருகே மூடி கிடந்த தண்ணீர் டிரம்மை திறந்து பார்த்தபோது, காணாமல் போன குழந்தை தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

குழந்தை டிரம்மில் இருந்து எடுத்துபோதே இறந்துவிட்ட நிலையில், சோபனா, சிசுவின் உயிர் திரும்ப சுவாசம் கொடுத்தும், உடலை தட்டியும் முயற்சி செய்துள்ளார். ஆனால், குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை.

குழந்தை இறந்துவிட்டதை அறிந்துகொண்ட சோபனா கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இதையடுத்து சம்பவம் அறிந்து வந்த போலீசார், மூடி கிடந்த டிரம்மில் குழந்தை கண்டெடுக்கப்பட்டதால், சந்தகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.