திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில் ரத்து!
திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில் அக்.15 முதல் நவ.22ஆம் தேதி வரை (தீபாவளி நாள் தவிர்த்து) ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் இருந்து மாலை 04.25 மணிக்கு புறப்படும் 06676 திருச்செந்தூர் – திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
16731 பாலக்காடு – திருச்செந்தூர் முன்பதிவிலாத ரயில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் தாழையூத்து – திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வரும் மார்க்கத்தில் 16732 திருச்செந்தூர் – பாலக்காடு முன்பதிவில்லாத ரயில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.45 மணிக்கு 85 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.
அக்டோபர் 15, நவம்பர் 17, 20, 21, 22 ஆகிய நாட்களில் 06687 திருநெல்வேலி – செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 01.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 02.40 மணிக்கு 40 நிமிடங்கள் காலதாமதமாகும் என்று ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.