மூலனூரில் காட்டுப் பகுதியில் கிடந்த பாதி எரிந்த ஆண் சடலம்!

கிரைம் நியூஸ் தமிழகம்
fire-dead-body
கோப்பு படம்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு ஆண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

மூலனூரில் ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் சுமார் 50 வயதான ஒரு நபரின் சடலம் பாதி தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

சடலத்தைப் பார்த்தவர்கள் மூலனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

காவலர்கள் விரைந்து சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு பகுதியில் கொலை செய்து வாகனத்தில் கொண்டு வந்து இங்கே வீசி சென்றனரா எனத் தெரியவில்லை. அருகிலுள்ள காவல் நிலையப் பகுதிகளில் யாராவது காணாமல் போயுள்ளனரா என தகவல் சேகரிக்கப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.