2021 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகிறது இந்தியா: ஐசிசி

Published:

aus india t20
aus india t20

2021 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்தும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடப்பாண்டு ஆக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக அடுத்த ஆண்டிற்கு (2021) ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் யார் நடத்துவது என்பது முடிவு செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில் 2021 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்தும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கெனவே திட்டமிட்ட படி 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2022 -ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img