ஆட்சியரத்தில் கண்ணாடி பாட்டிலும் கற்களும் வீசியவர்கள்… இன்று அரசு ஊழியராக உள்ளே!

தமிழகம்
stalin thuthukkudi victims
stalin thuthukkudi victims

அன்று கலெக்டர் அலுவலகத்தின் மீது கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசியவன், அரசு ஊழியராக இன்று உள்ளே நுழைகிறான்..

கொரோனா நெருக்கடியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றது தமிழகம்!

முதல்வர் ஸ்டாலின் அந்த நெருக்கடியினை திசைதிருப்ப தூத்துகுடியில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை என விஷயத்தை திசை திருப்புகின்றார்!

அரசு அலுவலகமெல்லாம் மூடி கிடக்கும் இந்நேரம் அவசரமாக வேலை கொடுக்கும் மர்மம் என்ன என்பதுதான் தெரியவில்லை!

கொரோனாவில் செத்துமடியும் உடல்களையும், மேற்கொண்டு ஊரடங்கு நீட்டிக்கபடும் அவசியம் இருக்கும் நிலையில் ஏதேதோ செய்து மக்கள் கவனத்தை திசை திருப்புகின்றது அரசு!

இந்த கொரோனா காலத்தில் சத்துணவு இல்லை, அங்கன்வாடி இல்லை!

அந்தப் பொருட்களை கொண்டு நோயாளிகளுக்கு இலவச உணவு கொடுக்காமல் அறநிலையதுறையில் இருந்துதான் கொடுப்போம் என்பதில் இருகின்றது இந்த அரசின் ஏதோ ஒரு தந்திர திட்டம்!

dmk govt
dmk govt
dmk govt1
dmk govt1

அநியாயத்தின் உச்சம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவயின் அலுவலகத்தையும், காவல்துறையினரின்‌ வாகனங்களையும் எரித்தவர்களையும், காவல்துறையினரை தாக்கியவர்களையும் கலைக்க காவல்துறை துப்பாக்கி சூடு‌ நடத்தியதில் உயிரிழந்தனர். இவர்களில் பலர்‌ நக்சல்களோடு சம்பந்தப்பட்டவர்கள்‌ என அப்போது அரசும், காவல்துறையினரும்‌ தெரிவித்தனர்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

இந்நிலையில் இன்று‌ அவர்களின் குடும்பத்தினருக்கு‌ அரசு வேலை வாய்ப்பை வழங்கி தி.மு.க அரசு அநியாயம் செய்துள்ளது இவர்களின் பின்னணி‌ பற்றி எதுவும் ஆராயாமல் அரசு வேலை வாய்ப்பை கொடுத்துள்ளது மிகுந்த அதிர்ச்சியாகவும் உள்ளது. நாளை அரசின்‌ இரகசியங்கள் இவர்கள்‌ மூலம் நக்சல்களுக்கு செல்லாது என்பது எப்படி தி.மு.க அரசு உறுதி கொடுக்க முடியும்

இது போன்ற செயல்கள் அரசின் நிர்வாகத்தை மட்டும் அல்ல, நாளை‌ மக்களையும் பதம்‌ பார்க்கும் என்பதில் மாற்றமில்லை…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.