தவறு செய்யும் அதிகாரிகள், மிரட்டும் அரசியல்வாதிகள்.. உடன் நடவடிக்கை: இறையன்பு ஐஏஎஸ்!

Published:

Screenshot 2021 0521 122222
Screenshot 2021 0521 122222

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

சில அரசு அலுவலர்கள் சட்டத்திற்கு புறம்பான வகைகளில் செயல்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது.
சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறுகளை செய்யும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது பணிநீக்கம் உட்பட துறை ரீதியான நடவடிக்கை கூட எடுக்க நேரிடும். தவறுகள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

அதிகாரிகள் நேர்மையாக பணி செய்ய வேண்டும். அரசின் இலவச சேவைகளுக்கு லஞ்சம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசின் பணித்துறையில் எந்த நிலையில் பணியாற்றும் அலுவலர் இருந்தாலும், எந்த வகையான நிறுவனமாக இருந்தாலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது தனியார் துறைகளும் நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடக்க வேண்டும்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

பொதுமக்களை அரசு அதிகாரிகளை அரசியல்வாதிகள் மிரட்டினாலோ அல்லது நலத்திட்ட உதவிகளுக்கு உதவிகோரவோ , மின்னஞ்சல் Cmcell@tn.gov.in மற்றும் தலைமைச் செயலகம் தொலைபேசி எண் 044- 25671764 எண் தொடர்புக் கொள்ளவும்” என்று கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img