சிதம்பரம் அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி இளவரசி. நேற்று அதிகாலை 3 மணி அளவில் இளவரசிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அவர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு நர்சுக்கு (Nurse) பிறந்தநாள் என்பதால், செவிலியர்கள் அந்த மருத்துவமனையில் பின்பகுதியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அந்த நேரத்தில் இளவரசிக்கு பிரசவ வலி அதிகாமானது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ஓடிச்சென்று நர்சுகளிடம் தெரிவித்தனர். அதன்பிறகு இளவரசியை நர்சுகள் அவசர, அவசரமாக அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு அழைத்து சென்று அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தினர்.
அப்போது இளவரசிக்கு பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. இதனால் கோவம் அடைந்த இளவரசி, மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்த நர்சுகள் மற்றும் டாக்டர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அங்கு போராட்டம் நடத்தினர்.
இது சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சிதம்பரம் போலீசார் அங்கு விரைந்து வந்து இளவரசியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ஊரில் இருந்து வரும்போதே இளவரசி நன்றாகத்தான் இருந்தார். குழந்தையின் அசைவும் அவருக்கு தெரிந்தது. இங்கு வந்ததும் நர்சுகள் பரிசோதனை செய்தனர்.
அதன்பிறகு அவரை கவனிக்கவில்லை. அவர்கள் ஆஸ்பத்திரியின் பின்பகுதிக்கு சென்று கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்கள். அப்போது இளவரசி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.
அவரை கவனிக்க நர்சுகளோ, டாக்டரோ இல்லை. நர்சுகள் மற்றும் டாக்டர்களின் அலட்சியத்தால்தான் இளவரசிக்கு குழந்தை இறந்தே பிறந்தது என்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தற்போது போலீசார் கூறினார். இதையடுத்து இளவரசியின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனை தொடர்ந்து டாக்டர்கள், நர்சுகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.