தடுப்பூசிக்கு பதிலாக, ஒருவருக்கு ரேபிஸ் நாய் தடுப்பூசி போட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட டாக்டர், நர்ஸ் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே நகராட்சிக்கு உட்பட்ட கல்வா என்ற பகுதியில் ஆட்கோனேஷ்வர் சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது.
மேலும் தடுப்பூசி முகாமும் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையும், முகாமும் ஒன்றாகவே இயங்கி வருகிறது. அதனால், இங்கேயே பல்வேறு நோய்களுக்கு மருந்து தரப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராஜ்குமார் யாதவ் என்பவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அந்த முகாமுக்கு சென்றிருக்கிறார்.
ஆனால், அங்கே ஒரு பெரிய கியூ நின்றுள்ளது. இவ்வளவு கூட்டம் வரிசையில் நிற்பதை பார்த்ததுமே எல்லாருமே தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்திருக்கிறார்கள் என்று நினைத்து, அதே வரிசையில் போய் நின்றுள்ளார். அங்கிருந்த நர்ஸும் அவருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதன் பிறகுதான் தெரிய வந்தது, வெறிநாய்க்கடி எதிர்ப்பு தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்கள் தான் அந்த வரிசையில் நின்றிருந்தவர்களாம்.
இதை கேட்டு யாதவ் கடுமையான அதிர்ச்சி அடைந்தார். இந்த விஷயம் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தெரியவந்ததையடுத்து, நர்ஸை சஸ்பெண்ட் செய்துவிட்டனர்.
அதேபோல பொறுப்பில் இருந்த டாக்டரும் சஸ்பெண்ட் ஆகியுள்ளார். தற்போது, கொரோனாவுக்கு பதிலாக வெறிநாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட யாதவை தீவிரமாக டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தானேவில் கொரோனா தடுப்பூசிக்கு பதில் ஒருவருக்கு ரேபிஸ் நாய் தடுப்பூசி போட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதையடுத்து, பொதுமக்களுக்கு கொஞ்சம்கூட குழப்பம் ஏற்படாத வகையில் சுகாதாரத்துறையினரின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையாக விடுத்து வருகின்றனர்.