தமிழகத்திலும் இரட்டை என்ஜின் சர்க்கார் : மதுராந்தகத்தில் பிரதமர் மோடியின் அதிரடி முழக்கம்!

maduranthagam meeting - 2026

மதுராந்தத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

” திமுக அரசை ‘சிஎம்சி’ அரசு என மக்கள் அழைக்கின்றனர். சிஎம்சி என்றால் ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்கள் ஆகியவற்றை ஆதரிக்கும் அரசு” என்றார் பிரதமர் மோடி.

எனது அருமை சகோதர சகோதரிகளே வணக்கம். 2026 ஆம் ஆண்டில் தமிழகத்துக்கு எனது முதல் பயணம் இது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு மகிழ்ச்சி நிறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் வளர்ச்சி மனிதர் எம்ஜிஆர் பிறந்த நாளை நாம் கொண்டாடினோம். இன்று இந்த மேடையில் இருந்து ஏரிகாத்த ராமனுக்கு தலைவணங்குகிறேன். அனைவரின் நலன், தமிழகத்தின் நலனுக்காக வேண்டிக் கொள்கிறேன்.

இன்று நேதாஜியின் பிறந்த நாள். இந்த நாளை பராக்கிராம நாள் என்று தேசம் கொண்டாடுகிறது. தமிழகத்தில் பல சுதந்திர போராட்ட தியாகிகள், நேதாஜி உடன் இணைந்து சுதந்திர போரில் ஈடுபட்டனர். வீரம் மற்றும்நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி நரம்பில் ஓடுகிறது. இந்த மண்ணில் இருந்து நேதாஜிக்கு வீரவணக்கத்தை காணிக்கையாக்குகின்றேன்.

இங்கே மக்கள் அலைகடல் என திரண்டுள்ளது. இது ஒட்டு மொத்த தமிழகத்துக்கும், தேசத்துக்கும் ஒரு செய்தியை அனுப்புகிறது. அது என்னவென்றால், தமிழகம் மாற்றத்துக்கு தயாராகிவிட்டது. திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழகம் துடிக்கிறது. பாஜவின் தேஜ கூட்டணி ஆட்சியை விரும்புகிறது. தேஜ கூட்டணி தலைவர்கள், தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள். ஒரே முடிவோடு, ஒரே நிலைப்பாட்டோடு இணைந்துள்ளனர். தமிழகத்தை திமுக அரசிடம் இருந்து விடுவிக்கவேண்டும் என்பதே நிலைப்பாடு.

தமிழகத்தை வளர்ச்சியடைந்த பாதுகாப்பான, ஊழல் அற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இதனை என்னால் தெளிவாக காண முடிகிறது. திமுக அரசின் கவுன்ட் டவுன் துவங்கிவிட்டது. ஆட்சி செய்ய திமுகவுக்கு வாய்ப்பு அளித்தீர்கள். அதிகாரத்தை அளித்தார்கள். ஆனால், நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்கள். வாக்குறுதிகளை அள்ளித்தெளித்தாலும் திமுக ஆற்றிய பணிகள் பூஜ்ஜியம்.

திமுக அரசை ‘சிஎம்சி’ அரசு என அழைக்கின்றனர். சிஎம்சி என்றால் கரப்சன், மாபியா, கிரைம் என்று அர்த்தம். ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்கள் ஆகியவற்றை ஆதரிக்கும் அரசு. தமிழக மக்கள் திமுக மற்றும் சிஎம்சி இரண்டையும் கிள்ளி எறிய வேண்டும் என தீர்மானம் செய்துவிட்டனர். தமிழகத்தில் தேஜவின் இரட்டை இன்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது.

தமிழகத்தில் ஜனநாயகம், நம்பகத்தன்மை இல்லை. திமுக அரசு,ஒரே ஒரு குடும்பத்துக்காக மட்டும் இயங்கி கொண்டு உள்ளது. திமுகவில் நீங்கள் முன்னேற வேண்டும் என்றால், நீங்கள் அவர்களுக்கு ஆமாம் சாமி போட வேண்டும்.  கலாசாரத்தை வசைபாடும் அரசாக இருப்பதினால் தான் திமுகவில் முன்னேற முடிகிறது. இதன் பாதிப்பை தமிழகம் சந்திக்கிறது. எத்தனை ஊழல் மலிந்துள்ளது. அந்த பணம் யார் பைகளுக்கு செல்கிறது என சிறு குழந்தை கூட தெரிந்துவைத்துள்ளது.

தமிழகம் எப்படிப்பட்ட பூமி என்றால், பாரதத்தின் பண்பாட்டை வளம் நிறைந்ததாக ஆக்கியது. சங்ககாலஇலக்கியம், கோவில், விஞ்ஞானம் இலக்கியம் ஆகியவை பாரதத்தை உயர்த்தியது. வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி முன்னேறும் நிலையில், தமிழகத்தை திமுக என்ற களையில் இருந்து அகற்றவேண்டும். தமிழகம் எவ்வளவு வேகமாக முன்னேறுகிறதோ அந்தளவு நாடும் முன்னேற்றம் அடையும்.

கடந்த 11 ஆண்டுகளில் தேஜ அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு வரலாறு காணாத பணிகளை ஆற்றி உள்ளது. 2014 க்கு முன்பு டில்லியில் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு,தமிழகத்தின் வளர்ச்சிக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் தேஜ கூட்டணி அரசு அதிகாரப்பகிர்வு வாயிலாக கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாயை அளித்துள்ளது.காங்கிரஸ் திமுக ஆட்சியுடன் ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகமானது.

கடந்த 11 ஆண்டுகளில் தமிழக மக்களின் நல்வாழ்விற்காக மத்திய அரசு 11 லட்சம் கோடி ரூபாய் உதவி அளித்துள்ளது. ஆனால், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஏழைகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவி வழங்குகிறோம் என்ற பெயரில் மோசடிகள் மட்டும் தான் அரங்கேறின.

திமுக கூட்டணி அரசு ரயில் பட்ஜெட் என்ற வகையில் தமிழகத்துக்கு அளித்த தொகையை விட தேஜ கூட்டணி அரசு 7 மடங்கு அதிக நிதியை அளித்துள்ளது. தமிழகத்தில் 80 ரயில்நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் போன்ற அதிவேகமாக செல்லும் ரயில்களை தேஜ கூட்டணி அரசு தான் இயக்கி இருக்கிறது.

தமிழகத்தின் மிகப்பெரிய பலம் என்றால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தான். தேஜ கூட்டணி அரசின் கொள்கைகளால் விவசாயத்தில் சாதனை படைக்கும் அளவுக்கு உற்பத்தி நடக்கிறது. மீனவர்கள் மற்றும்விவசாயிகளுக்கு ஆதரவான கொள்கைகளே காரணம். முன்னர் குறைவான விவசாயிகள் மட்டுமே வங்கிக் கணக்கு இருந்தது. தேஜ கூட்டணி அரசு வங்கி கணக்குகளை சேர்ந்து கொடுத்தது. அத்துடன் விவசாயிகள் நிதியுதவி துவக்கப்பட்டது. இதுவரை 4 லட்சம்கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைத்து இருக்கிறது.

தேஜ கூட்டணி அரசு மீன்வள திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மீனவர்களுக்கு கடன் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. தேஜ அரசு சிறு விவசாயிகள், மீனவர்கள் கூட்டுறவோடு இணைத்து வருகிறது. தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் துறையில் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. விவசாயிகள், மீனவர்களின் உற்பத்தி பொருட்கள் உலகசந்தையில் கொண்டு சேர்க்க பாஜ அரசு செயல்பட்டு வருகிறது.

வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்குவதில் நமது இளைஞர்கள், பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால்,இங்கு இருப்பதோ திமுக அரசு. அவர்களை, போதைப்பொருள், குற்றவாளிகளிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.தங்கள் கண்முன்னரே குழந்தைகள் பாதிக்கப்படுவதை பெற்றோர் பார்க்கின்றனர்.

இளைஞர்களை போதைப்பொருட்களில் இருந்து மீட்க வேண்டும். தேஜ கூட்டணிக்கு அளிக்கும் ஒட்டு போதைப்பொருளுக்கு எதிரானது. திமுக ஆட்சியில் போதைப்பொருள் வியாபாரிகள் சிறப்பாக உள்ளனர். தமிழக மக்களின் நலனில் தேஜ கூட்டணி அக்கறை கொண்டு உள்ளது.

முருகனுக்கு விளக்கு ஏற்றுவதில் கூட பிரச்சினை

திருப்பரங்குன்றத்தில் நமது முருகப் பெருமானுக்கு விளக்கு ஏற்றுவது விவாதப் பொருளாக்கப்பட்ட போது நம்முடைய தலைவர்கள் எல்லாம் பக்தர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தார்கள். ஆனால், திமுகவும் அவர்களது கூட்டாளிகளும் தங்கள் வாக்கு வங்கிக்காக நீதிமன்றங்களையும் விட்டு வைக்கவில்லை; அவர்களையும் அவமானப்படுத்தினார்கள்.

தமிழ் கலாச்சாராத்தின் எதிரி திமுக

பிரதமர் மோடிக்கு திருப்பரங்குன்றம் முருகனின் வெள்ளியிலான உருவம் பதித்த நினைவுப் பரிசை என்டிஏ கூட்டணிக் கட்சி தலைவர்கள் வழங்கினர். தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். தமிழர்கள், தமிழ் கலாச்சாராத்தின் எதிரி திமுக. இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள், நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர். வீரம், நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் நிறைந்துள்ளது.

திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது

மேடையில் உள்ள தலைவர்கள் தமிழக எதிர்காலத்தை தீர்மானிப்பர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் விரும்புகிறார்கள்; தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்த, ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும். திமுக அரசு ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கி வருகிறது. திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது; ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது; திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. தமிழ்நாட்டில் எங்கெங்கும் ஊழல் என குழந்தைக்கும் தெரியும்; திமுக அரசை குற்றம், மாபியா, ஊழல் அரசு என்று மக்கள் கூறுகின்றனர்.


பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி

மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி தேவையா? திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான்; வரும் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்; இதுதான் திமுகவுக்கு இறுதித்தேர்தல். தேர்தலில் பெரும்பான்மை பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்; வரும் தேர்தலில் 210 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். முதல்வர் ஸ்டாலின் குடும்பம் உலக அளவில் பணக்கார குடும்பமாக உள்ளது; எந்த தகுதியின் அடிப்படையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி?; தே.ஜ கூட்டணி மிக வலிமையாக உள்ளது; பிரதமர் மோடி நமக்கு துணை நிற்கிறார்.

தகுதியற்ற அரசு… பூஜ்ய அரசு: அன்புமணி

திமுக ஆட்சியின் முடிவுக்கு இன்று ஒரு தொடக்கம்; ஜீரோ கவர்மென்ட்; ஜீரோ கவர்னன்ஸ்; இன்னும் 2 மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவார் எடப்பாடி பழனிசாமி. 2047இல் இந்தியாவை வல்லரசாக மாற்ற அழைத்துச் செல்பவர் பிரதமர் மோடி.

அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும்… -டிடிவி தினகரன் பேச்சு

மதுராந்தகம் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை டிடிவி தினகரன் கூறியதும் கூட்டத்தினர் ஆரவாரம்.

எந்தவித அழுத்தமும் இன்றி அமமுக NDA கூட்டணியில் இணைந்துள்ளது; இந்த கூட்டணியின் வெற்றிக்காக அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் தமிழ்நாடு முழுவதும் அயராது பாடுபடுவான் என்கின்ற உறுதியை, பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லி கொள்கிறேன்.

நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மைதான்; ஆனால் தமிழ்நாட்டின் நலனை கருதியும் அமமுகவின் நலனை கருதியும் பிரதமரின் அழைப்பை ஏற்று எங்கள் மனதிலே இருந்த கோப, தாபங்களை விட்டுவிட்டு எந்த அழுத்தமும் இன்றி இந்தக் கூட்டணியில் இணைத்துக் கொண்டோம்.

சூரியன் மறைந்து விட்டது: அண்ணாமலை

“கொளுத்திக் கொண்டிருந்த சூரியன் மறைந்துவிட்டது; இது மாற்றத்திற்கான கூட்டம்; மழை பெய்கிறது; மழையால் தாமரை, இலை மலரும்.”

உலக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் மோடி: கே.பி.முனுசாமி

“2014இல் பிரதமராக பொறுப்பேற்று பின் தங்கிக் கிடந்த இந்திய துணைக் கண்டத்தை இன்று உலகமே வியக்கும் வண்ணம் மாற்றிய தலைவர் பிரதமர் மோடி; உலக பிரச்னைகளுக்கு இந்தியாவில் இருந்து தீர்வு கூறக்கூடிய தலைவராக அவர் இருக்கிறார்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Topics

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டம் 08.03.2026 அதிரடி வெற்றி – கோப்பையை வென்ற இந்திய அணி

மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Entertainment News

Popular Categories