கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலமானார். பல்வேறு தரப்பினரும், செல்லூர் ராஜூ வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி இன்று செல்லூர் ராஜூ வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்ததோடு, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒச்சம்மாளின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அழகிரி அஞ்சலி செலுத்தினார்.
Popular Categories




