சென்னை: பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குப் போக வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அப்படியெனில் கடைசி நேர பரபரப்பு இல்லாமல் ரயிலில் நிம்மதியாக பயணம் செய்ய, இன்றே முன்பதிவு செய்யுங்க.
வரும் 2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. ஜனவரி 11-ஆம் தேதி பயணம் செய்ப்பவர்கள் இன்று முன்பதிவு செய்யலாம். 12-ம் தேதி செல்பவர்கள் நாளை பதிவு செய்யலாம்.
13ஆம் தேதி செல்பவர்கள் நாளை மறுநாள் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.




