ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டி.ஆர்.பி. தேர்வில் இதற்கு முன்னர் சிறிய தவறுகள் நடத்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆய்வில் அரசு ஈடுபட்டு இருப்பதாகவும், இதனால் கால தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்
Popular Categories




