திருப்பூரில் நான்கு வயது சிறுவன் காய்ச்சலால் உயிரிழப்பு !

Published:

logesh - 2026திருப்பூரை அடுத்த வாவிபாளையம் படையப்பா நகரை சேர்ந்தவர் நடேசன். இவர் ஒரு பனியன் தொழிலாளி, இவரது 4 வயது மகன் லோகேஷ்.

கடந்த 14 ஆம் தேதி லோகேஷு  காய்ச்சலால் அவதி அடைந்தான். அதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கே காய்ச்சல் சரியாகாத காரணத்தால் கோவையில் அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுவனை அழைத்துச்சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் லோகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான். இதனிடையே படையப்பா நகர் பகுதி மக்கள், ஊத்தக்குளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு வாட்டர் பாட்டிலில் அவர்கள் அருந்தும் கலங்கலான குடிநீரை எடுத்துக் கொண்டு வந்து பார்வைக்கு வைத்தனர்

மறியலின்போது, நல்ல குடிநீர், சாக்கடை , என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத காரணத்தால் எங்களை நோய்த்தொற்றுகிறது.  இதை பற்றி எத்தனையோ முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போ இந்த குழந்தையோட உயிர் அநியாயமா போயிடுச்சு. உயிரிழப்பிற்கு நியாயம் தேவை.அடிப்படை வசதிகளும் எங்களுக்கு உடனடியா தேவை” என்று ஆவேசத்துடன் சொன்னார்கள்.

இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். அவர்களிடம் பெண்கள் லிஸ்ட் போட்டு குறைகளை சொல்லி கொண்டே போனார்கள். பிறகு அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img