திருமாவளவன்… மாயாவதி… அம்பேத்கரின் கொள்கையை பின்பற்றுவது யார்?

Published:

mayavathi thirumavalavan - 2026

370 நீக்கத்துக்கு மாயாவதி ஆதரவு; திருமாமாவளவன் எதிர்ப்பு! அம்பேத்கரின் கொள்கையை பின்பற்றுவது யார்?

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்தது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் அந்தக் கட்சி எம்.பிக்கள் காஷ்மீர் மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர்.

காஷ்மீருக்கு தனி அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து மாயாவதி கூறியபோது… அரசியல் சட்டத்தின் 370, 35ஏ பிரிவுகள் நீக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேறி உள்ளது. இனிமேல், மத்திய அரசு திட்டங்களின் உண்மையான பலன்கள், காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும்.

லடாக்கை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்ற அந்த மக்களின் கோரிக்கையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள அம்பேத்கரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்… என்றார்.

ஆனால் அம்பேத்கரை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும்  திருமாவளவன், அம்பேத்கர் கொள்கையைக் காற்றில் வீசிவிட்டு, தமது இஸ்லாமிய எஜமானர்கள் சொன்னபடி, காஷ்மீர் தனி அந்தஸ்து நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

இது தொடர்பாக அவர் கூறியபோது, “ மத்திய பாஜக அரசு மக்களவையில் பெரும்பான்மையை பயன்படுத்தி கூட்டத்தொடரில் ஏராளமான மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றினார்கள். அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்ற அச்சத்தில் இருந்தபோது திடீரென ஜம்மு-காஷ்மீரில் ஆயிரக்கணக்கான ராணுவத்தை குவித்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தனர். முன்னாள் முதல்வர்கள் வீட்டு காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அந்தஸ்து வழங்கி அந்த மாநிலத்தை சேர்ந்த வேறு யாரும் நிலத்தை வாங்க முடியாத நிலை இருந்தது. ஆனால் அவற்றை தகர்த்து மாநிலத்தை 2 ஆக பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்து உள்ளனர். இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கை…” என்றார்.

காஷ்மீர் பிரச்சனையில் நாம் சக்தி அனைத்தையும் வீணாக்கி வருகிறோம். காஷ்மீரை பிரிவினை செய்வதே சரியான தீர்வு என்பதே எனது கருத்தாக இருந்து வந்திருக்கிறது. இந்து மற்றும் புத்த மதத்தினர் வாழும் பகுதியை இந்தியாவுக்கும் முஸ்லிம்கள் வாழும் பகுதியை காஷ்மீருக்கும் கொடுங்கள்.

– அம்பேத்கர்

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img