31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி38

Published:

pslv38 - 2026

சென்னை:

29 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்பட 31 செயற்கைக்கோள்களைச் சுமந்து கொண்டு ‘பி.எஸ்.எல்.வி., – சி 38’ ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. – சி 38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட் – 2 செயற்கைக்கோளை இன்று காலை 9:29க்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை 5:29க்கு துவங்கியது.

பூமியைக் கண்காணிக்கும் கார்ட்டோசாட் செயற்கைகோளுடன் ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 29 செயற்கைக்கோள்களும், இந்தியாவைச் சேர்ந்த ஒரு நானோ செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

மேக் இன் இந்தியா திட்டம் மூலம் அறிவியல் ரீதியில் சிறப்பான முன்னேற்றத்தை நாடு எட்டும் என அரசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்தியில்,

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

பி.எஸ்.எல்.வி., – சி 38 ராக்கெட் மூலம், ‘கார்ட்டோசாட் – 2’ செயற்கை கோளை, இன்று காலை (23.06.2017)ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, வெற்றிகரமாக இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது   மகிழ்ச்சி அளிக்கிறது. பிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயலால் இந்தியா உலக அரங்கில் நிமிர்த்து நிற்பதுடன், ஒவ்வொரு இந்தியரையும் பெருமை அடைய செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை… என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img