
அம்புலிமாமா – சந்தமாமா
தயார் நிலையில் நம் இந்திய இஸ்ரோ பல சாகசங்களை செய்ய காத்திருக்கிறது. இன்று அதற்கு மிக முக்கியமான ஒரு நாள். சந்திரனுக்கு விண்கலனை அனுப்பி கொண்டு இருந்த நாம் இப்போது அதிலேயே தரையிறங்க விண்கலம் அனுப்ப திட்டமிட்டு நாள் குறித்து விரிவான ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம்.
நாளை மதிய வேளை சுமார் 2:30 மணி அளவில் சந்திரனில் தரையிறங்கும் விண்கலனை சுமந்து கொண்டு நம் இந்திய #LVM3 பறக்க இன்று கௌண்ட் டவுன் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.
இது முதல் முறையா என்றால். இல்லை. மூன்றாம் முறை, ஆதலால் இதற்கு சந்திராயன் 3 என பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த உலகில் இது தான் முதல் தடவை. உலகம் இது வரை பார்த்திராத நிலவின் மறுபக்கத்தில் நாம் அனுப்ப இருக்கும் வாகனம் தரையிறங்க இருக்கிறது. அப்படி என்றால் நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்ததாக அறியப்படும் அமெரிக்க நீல் ஆம்ஸ்ட்ராங் அதுவும் உண்மை. அவர் தரையிறங்கியது நாம் பார்க்கும் நம்மால் பார்க்க முடிந்த நிலவின் ஒரு பக்கத்தில்.
என்ன வித்தியாசம்?
இங்கு சூரிய ஒளி உண்டு. இன்னமும் சரியாக சொன்னால் சூரிய ஒளி படும் நிலவின் ஒரு பக்கத்தில் தரை இறங்கி சாதித்தனர் அன்று. இங்கு வேடிக்கையான ஒரு சுவாரசியம் சொல்வர். அன்று அந்த அமெரிக்க விண்கலம் தரையிறங்கிய சமயத்தில். அதற்குண்டான செயல்திறன் தொழில்நுட்பம் வெறும் கால்குலேட்டர் சிப் செட்டில் என்ன இருந்ததோ அதாவது அதன் கொள்திறன் அவ்வளவு மட்டுமே இருந்தது என்கிறார்கள்.
அதனோடு ஒப்பிடுகையில் இன்றைய வானளாவிய அசுர வளர்ச்சி மிக பிரமாண்டமானது என்பதில் அணு அளவிலும் சந்தேகம் இல்லை.
இங்கு மற்றோர் கேள்வியும் முன் வைக்கப்படுகிறது. 1969 பிறகு ஏன் மீண்டும் அமெரிக்கா நிலவிற்கு மனிதனை அனுப்ப முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என கேட்பவர்களும் உண்டு.
அவ்வளவு ஏன் ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே நிலவில் கால் வைத்ததாக சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை ஹாலிவுட் பாணியில் செட் போட்டு இங்கேயே எடுத்துவிட்டு கதை விட்டு கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் புரளி பேச ஆரம்பித்து அமெரிக்காவே கதி கலங்கி நிற்கும் நிலையெல்லாம் ஏற்பட்டுருக்கிறது. கால் வைத்த சமயத்தில் படம் பிடிக்கப்பட்ட காமெரா எது? படமாக்கப்பட்ட சுருள் எங்கே என்றெல்லாம் கேள்விகள் பிறக்க
அமெரிக்கா முதல் முறையாக வாய் திறந்தது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த படச்சுருள் காலத்தால் அழிந்து போனது என ரத்தின சுருக்கமாக முடித்து உலகிற்கு அதிர்ச்சி அளித்தார்கள் அந்த சமயத்தில் உலகமே மிரண்டு தான் போனது.
இந்த சமயத்தில் தான் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றான ட்ரான்ஸ்பாமர்ஸ் சீரிஸ் வெளிவாகி சக்கை போடு போட்டது எல்லாம் நடந்தது.
தற்போது நம் விஷயத்திற்கு வருவோம். இந்த உலகில் நமக்கு முன்பாக கிட்டத்தட்ட நான்கு ஐந்து நாடுகள் சந்திரன் மீது கொண்ட மோகத்தால் தங்களுடைய விண்கலனை அங்கு அனுப்ப வெற்றிகரமாக தரை இறக்கி ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். நாம் அப்படி தரையிறக்க அனுப்பியபோது தான் நமது கலத்தில் இருந்து பிரியும் வரை எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்தது.
கட்டக் கடைசியில் நிலவின் மேற்பரப்பில் மோதினார் போல் தரையிறங்கி செயலிழந்தது. இதற்கு காரணம் (சாஃப்ட்வேர்) மென்பொருள் பிழை என பின்னாளில் கண்டறியப்பட்டது. இதனோடு அனுப்பிய சுற்றுவட்டப் பாதையில் இயங்கிடக்கூடிய செயற்கை கோள் மிக நல்ல முறையில் இயங்கியது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இஃது சந்திராயன் 2 ஏவப்பட்ட நாள் இதே போன்றதொரு ஜூலை மாதம் 22 ஆம் தேதி, 2019 ஆம் ஆண்டு.
சந்திரனுக்கு நாம் முதன் முதலில் ஆய்வுக்கென்று விண்கலம் நவம்பர் 8,2008 ஆம் தேதியன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது, இஃது அதே ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி வாக்கில் நிலவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் குறிப்பிட்ட வேகத்தில் சென்று மோதும் படி வடிவமைக்கப்பட்டு அதனையும் வெற்றிகரமாக செய்து முடித்தது.
இந்த மோதலின் போது தான் அங்கு கிளம்பிய தூசி மற்றும் புழுதியில் இருந்து தான் நிலவில் தண்ணீர் இருப்பதை ஆதாரபூர்வமாக நம்மவர்கள் நிரூபித்ததும் காட்டினார்கள் அதுதான் முதல் தடவை நமக்கு நிலவுடனான நேரடி பரிச்சயம். உலகிற்கும் அதுவே முதல் முறையான நீர் இருப்பதற்கு உண்டான ஆதாரமும் கூட அத்தோடு கூட நிலவுக்கு விண்கலம் அனுப்பி வெற்றி கண்ட நாடுகளின் பட்டியலில் நாம் நான்காவதாக இணைந்தோம்.
சரி இதனால் எல்லாம் என்னமாதிரியான பலாபலன்கள் உண்டு உலகிற்கு?
அல்லது நமக்கு என்ன மாதிரியான அறிவியல் பூர்வமான ஆதாயங்கள் ? என்பன போன்ற கேள்விகள் சகஜமான ஒன்றே.
இந்த உலகம் தோன்றின காலத்தில் இருந்த தட்பவெப்ப நிலை அதன் தோற்றம். உயிரி சூழல் போன்றனவற்றை அறிவியல் பூர்வமான அறிந்து கொள்ள இவையெல்லாம் உதவும் என்கிற கோட்பாடு ஒன்று உண்டு.
இந்த உலகில் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப் பெரிய உயிரினங்களாக அறியப்படும் டைனோசர்கள் முற்று முழுதாக அழிந்ததன் காரணம் என்ன என்பதை ஊகிக்க அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பலரும் பல்வேறு விதமான முயன்று கொண்டு இருக்கிறார்கள். அவை வாழ்ந்தது நிஜம். புதைப்படிவ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் அழிந்ததன் காரணம் குறித்து பலருக்கும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. நிலத்தில் வாழ்ந்தவை மட்டுமே இறந்தன ஆனால் கடலடியில் இருப்பவை அப்படியே இருக்கின்றன என்பது போன்ற கோட்பாடுகளும் உண்டு.
அதுபோலவே இந்த உலகை மிகப் பெரிய அளவிலான விண்கல் ஒன்று மோதிட. மோதிய வேகத்தில் நம் பூமி பந்தில் இருந்து பிரிந்தது தான் இந்த நிலவு என்கிற கோட்பாடும் ஒன்று உள்ளது. அந்த சமயத்தில் எழுந்த புழுதி மண்டலம் தான் சூரிய கதிர்கள் இந்த பூமி மீது விழாமல் தடுத்திட அதனால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தினால் உயிரி சுழல் முற்றாக குலைந்து பல்வேறு தாவர இனங்கள் அழிந்து அது சார்ந்த தாவிர உண்ணிகளும் மடிந்தன என்கிற ரீதியிலான கோட்பாடுகளும் உள்ளன.
இவை சரி என்றால் அப்படி அந்த விண்கல் நம் பூமி மீது மோதிய இடத்தில்.மோதிய வேகத்தில் உருவான பள்ளம் தான் பசிபிக் பெருங்கடல் பகுதி என்கிறார்கள். அல்லது அந்த இடத்தில் இருந்து பிரிந்தது தான் தற்போதைய நிலவும் என்றும் ஒரு சாரார் வாதிடுகிறார்கள். அதன் பொருட்டே நம்மவர்கள் நிலவின் நீர் மூலக்கூறுகள் மீது தனி கவனம் செலுத்துகிறார்கள்.
இந்த இடத்தில் ஓர் ஆச்சரியமான ஆராய்ச்சி தகவல் ஒன்று உண்டு. அது இந்த பூமியில் தண்ணீர் இருந்தது இல்லை. அதாவது இந்த பூமியில் உண்டானது இல்லை.வெளியே இருந்து தான் வந்திருக்கிறது எனும் கூற்றும் உண்டு. அது போலவே தண்ணீர் மூலக்கூறுகளில் ஞாபக நினைவகங்கள் உண்டு என்பதையும் அறிவியல் நமக்கு எடுத்து சொல்லி அதிர்ச்சி அளித்திருக்கிறது. இவையெல்லாம் ஓர் மைய புள்ளியாகஎங்கோ ஓரிடத்தில் நம் இந்திய இதிகாச புராணங்களில் கூறப்படும் விஷயங்களோடு ஒத்துப் போகிறது. இன்று வரை நமக்கு #பகீரத_பிரயத்தனங்களாக தெரியும் சங்கதிகள் நமக்கு முன்பாக நம் முன்னோர்களுக்கு நன்கு பரிச்சயமான சமாச்சாரமாகவே இருக்கிறது.
இவையெல்லாவற்றுக்கும் விடை தேடவே இந்த விண்வெளி பயணம். அதன் ஓர் பகுதியாக இந்த சந்திராயன் சீரிஸ் பயணங்கள்.
இதனை அடுத்து நாம் நிலவில் தரையிறங்க போகும் ககண்யான் திட்டம் செயல்படுத்த இருக்கிறார்கள். இத்திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகளும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன என்பதை நம்மில் பலரும் அறிந்திராத விஷயங்களாகவே இருக்கிறது.
இப்படி இந்த திட்டத்தில் தேர்வு செய்து அவரது பயிற்சி காலத்தில் இருந்த ஒருவர் தான் நம் இந்திய முதல் முப்படை தளபதி திருவாளர் திரு பிபின் ராவத் பயணம் செய்து ஹெலிகாப்டரை இயக்கிய விமானியும் கூட இது விபத்தில் சிக்கி அதில் பயணித்த அனைவரும் மரணித்த சமயத்தில் இவர் மாத்திரம் இரண்டு நாட்களுக்கு தாக்கு பிடித்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதையும் இந்த சமயத்தில் நாம் நினைவு கூறுவோம்.
நாளை மதியம் ஏவப்பட உள்ள நம் இந்திய சொந்த தயாரிப்பு சந்திராயன் 3 வெற்றிகரமாக பயணிக்க பல சோதனைகளை கடந்து சாதிக்க எல்லாம் வல்ல இறையருளை பிரார்த்திப்போம். ஓர் வகையில் இது நமக்கான தவம். தரமான சம்பவங்களுக்கு காத்திருப்போம்.
வாழ்க பாரதம்.
- ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்