December 5, 2025, 12:10 PM
26.9 C
Chennai

செமிகான் இந்தியா 2024 மாநாடு: அப்படி என்ன ஸ்பெஷல்?

IMG 20240912 WA0007 - 2025
#image_title

கோலோச்சும் பாரதம்

பலரும் பலராலும் எதிர்பார்த்த ஒரு மாநாடு – செமிகான் இந்தியா 2024 கலந்தாய்வுக் கூட்டம், நேற்று இன்று நாளை நடந்து கொண்டிருக்கிறது!

அதென்ன செமிகான்.?

இன்றைய இணைய உலகின் அத்தியாவசிய உயிர்நாடி இந்த செமிகண்டக்டர் சிப்செட்கள் தான். அதிலும் நானோ தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட சூப்பர் செமிகண்டக்டார் தான் இன்றைய இணைய உலகை கட்டி ஆள்கிறது. இதில் இன்றைக்கு தைவான் முன்னோடியாகத் திகழ, தாமதமாக விழித்துக் கொண்ட அமெரிக்கா ஆலாய்ப் பறக்கிறது. ஒன்றும் பருப்பு வேகவில்லை. காரணம் பெய்ஜிங் உள்ளே புகுந்து அதகளம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு தகவல் உண்டு. சீனர்கள் அமெரிக்கர்களை முந்தி இருக்கிறார்கள். சரியாகச் சொல்வதென்றால் அமெரிக்கா கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பின் தங்கி இருப்பதாக புள்ளி விவர தரவுகள் சொல்கின்றன.

அப்படி என்றால் என்ன மாதிரியான விளைவுகளை இது ஏற்படுத்தக்கூடும்?!
இந்த விஷயம் புரிந்து கொள்ள வசதியாக, உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் ஐபோன் தனது ஐபோன் 16 வெளியிட இருக்கிறார்கள். அதைக் குறித்துப் பார்த்தால் புரியும்.

ஐபோன் 16ல் என்ன மாதிரியான மேப்படுத்தல்களை அதில் புகுத்தி இருக்கிறார்கள் என்று பார்த்தவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. ஒரேயொரு பட்டனை அதிகப் படியாக சேர்த்து விலையை மாத்திரம் ஏகத்திற்கு உயர்த்தி இருக்கிறார்கள். சரி அந்த பட்டன்- சிறப்பு வாய்ந்த AI தொழில்நுட்ப பண்புகளை சேர்த்திருப்பதாக சொன்னாலும், அதனை கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனம் ஏற்கெனவே தங்களுடைய செல்போன் தயாரிப்பில் இணைத்து விட்டன. ஆக ஆப்பிள் ஐபோன் 16 அநேகமாக நொண்டும் என்கிறார்கள் நுகர்வோர் வட்டாரங்களில்! இது ஒரு சான்று!

இந்த உலகில் இன்றைய தேதியில் சாமானியனின் கைகளில் இருக்கும் அதிகபட்ச தொழில்நுட்பத் திறன்களை கொண்ட ஒன்று என்றால் அது செல்போன்தான். அதில் பிரதான பங்கு வகிக்கிறது அதன் சிப் செட்.

இன்றைய தேதியில் 5 நானோ மீட்டர் தொழில்நுட்ப பண்புகளை கொண்ட சிப் செட் தான் இந்த உலகை தன் வசம் வைத்திருக்க, நம் இந்தியாவில் டாட்டா குழுமத்திற்குச் சொந்தமான நிறுவனத்தில் 3 நானோ மீட்டர் தொழில்நுட்ப பண்புகளை கொண்ட சிப் செட்டை உருவாக்கி தயாரித்து, தயார் செய்ததை உலகின் முன்னணி நாடுகளின் உள்ள தலைசிறந்த மென்பொருள் நிறுவனங்களுக்கு கொடுத்து அதன் செயல் திறனை சோதித்துக் கொள்ள சொல்ல, பார்த்தவர்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள். அதி அற்புதமான செயல்பாடுகளை கொண்டிருப்பதாக அவர்கள் சிலாகித்து வருகிறார்கள்.

ஆக நம்மவர்களுக்கு இது ஒரு மைல் கல் சாதனை இது!

இதனோடு கூடவே 6G தொழில்நுட்ப பண்புகளை கொண்ட ஆன்ட்ராய்டு வெர்ஷன் 17 உருவாக்கி அதனை காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்.

3 நானோமீட்டர் அலகு கொண்ட சிப் செட்டில் 6G தொழில்நுட்ப பண்புகளில் இயங்கும் இணைய தளம், தற்போதைய உலகின் முன்னணி ஜப்பானிய தொழில்நுட்ப பண்புகளை ஓரம் கட்டி முன்னிலை பெற்று விடும் என கணித்திருக்கிறார்கள்.

இன்றைய தேதியில் ஜப்பான் மட்டுமே 400 டெராபிட்டில் இயங்கும் இணையதள வசதிகளைக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. நம்மூர் கணக்கில் எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 12000 படங்களை நொடிப்பொழுதில் தரவிறக்கம் செய்யும் வல்லமையை இது காட்டுகிறது.

செமிகண்டக்டர்களின் பயன்பாடு ஏதோ செல்போன்களுக்கு மாத்திரமே என நினைத்துக் கொண்டு விடவேண்டாம். மின்னணு உபகரணங்கள் அத்தனையிலும் இந்த செமிகண்டக்டார்ஸ் உள்ளது.மின்னணு சாதனங்கள் இன்று உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது கவனித்தில் கொண்டால் இதன் நீள வீச்சு புரியும்.

நம்மவர்கள் இன்னமும் கொஞ்சம் ஒரு படி முன்னேறி இந்த செமிகண்டக்டர்ஸை பாதிப்படைய செய்யும் மின்காந்த புலங்களை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட உபகரணங்களையும் உருவாக்கி சோதனை செய்து வருகிறார்கள். நவீன உலகின் போர்முனையில் இனி மின்னணு சாதனங்களே கோலோச்சப்போகிறது என்பதை அனுமானித்து அதற்கேற்ப முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நம்மவர்களின் துல்லிய திறனுக்கான எடுத்துக்காட்டாக நிலவுக்கு பல நாடுகளிலும் செயற்கைக்கோள்களை அனுப்பியிருந்தாலும், நிலவில் தண்ணீர் இருப்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தது நம் இந்திய தேசம்தான். அதுபோலவே பலரும் அங்கு புகைப்படங்கள் எடுத்து அனுப்பிய போதிலும் நாம் எடுத்த புகைப்படங்களுக்கும் அவர்கள் எடுத்தவைக்குமே நிறைய வித்தியாசம் இருக்கிறது.

ஆக இதற்கான விதை ஊன்றப்பட்டது இன்று நேற்று அல்ல; முளைவிட்ட துளிர் மட்டுமே தற்போது நம் கண்களுக்கு தெரிகிறது! இன்னமும் வளர வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை மட்டுமே நாம் சொல்வோம். இது போல் நிறைய இருக்கின்றன! அவற்றை வரும் நாட்களில் பார்த்து விடலாம். அப்போது தான் நம் இந்திய தேசத்திற்கெதிரான சதியில் யாரெல்லாம், எவ்வாறெல்லாம் பங்கு கொண்டு இருக்கிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அப்போதுதான் ஜார்ஜ் சோரஸ் போன்றவர்களோடு சோரம் போன ராகுல் வின்சியை மிகச் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். அப்போது தான் தரங்கெட்ட தற்குறியை எவ்வாறு காங்கிரஸ் கட்சியினர் தாங்கிப் பிடிக்கிறார்கள் என்கிற சாமானியனின் கேள்விக்கு பதில் கிடைக்கக்கூடும்!

  • ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories