உருதுக்கு பதிலாக சம்ஸ்கிருதம்! மாற்றம் பெறும் ரயில் நிலைய பெயர்ப் பலகைகள்!

Published:

dehradun - 2026

தமிழகத்தில் தார் டின்களைத் தூக்கிக் கொண்டு திரிந்த ‘அறிவை வளர்க்கும் பத்திரிகைகளைப் படிக்காதவர்கள்’ தங்களுக்குக் கொடுக்கப் பட்ட பயிற்சியின் படி, ரயில்வே நிலைய பெயர்ப்பலகைகளில் எழுதப் பட்டிருக்கும் ஹிந்தி எழுத்துகளை அழித்து வந்தார்கள். சாலையோர ஊர் வழிகாட்டும் கற்களில் எழுதப் பட்டிருந்த ஹிந்தி ஊர்ப் பெயர்களை அழித்து வந்தார்கள். காட்டுமிராண்டிகள் சிலர், காஞ்சிபுரம் போன்ற ஊர்களின் ரயில் நிலையங்களில் வரையப் பட்டிருந்த தெய்வீக ஓவியங்களை சிதைத்து அழித்து தங்கள் குருட்டு குரூர புத்தியைக் காட்டிக் கொண்டார்கள்.

தமிழகத்தில் இப்படி ஓர் அருவெறுப்பு அரசியல் நடந்து கொண்டிருக்கும் போது, வடக்கே ரயில்வே அதிகாரிகள் பாரம்பரியத்துக்கு மாறும் நவீன அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

உத்தராகண்ட் ரயில் நிலையங்களில் உருது மொழியை அகற்றிவிட்டு, சமஸ்கிருதத்தில் ஊர்ப் பெயர்களை எழுத ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

இந்தி, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் எழுதப்பட்ட ரயில் நிலையங்களின் பெயர்களைக் கொண்ட சைன்போர்டுகள் இப்போது இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் எழுதப்படும்.

ரயில்வே அதிகாரிகளின் கருத்துப் படி, ரயில் நிலையங்களின் பெயர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநிலத்தின் இரண்டாவது மொழியில் எழுதப்பட வேண்டும் என்று கூறும் ரயில்வே கையேட்டின் விதிகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

இமயமலை கொண்ட மாநிலத்தின் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியின் நிலையை சமஸ்கிருதத்திற்கு வழங்கி நாட்டிலேயே முதன்மையானதாகத் திகழ்கிறது உத்தராகண்ட்.

அப்போதைய முதல்வர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சமஸ்கிருதத்தை மாநிலத்தில் ஊக்குவிக்க விரும்புவதாகக் கூறினார். இமாச்சலப் பிரதேசம் 2019 ஆம் ஆண்டிலும் இதைப் பின்பற்றியது.

உள்ளூர் குழு இதை சுட்டிக்காட்டியதை அடுத்து மொராதாபாத் ரயில்வே பிரிவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தீபக் குமார் தெரிவித்த போது, “ரயில்வே கையேடுகளின்படி, ரயில் நிலையங்களின் பெயர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர மாநிலத்தின் இரண்டாவது மொழியில் சைன்போர்டுகளில் எழுதப்பட உள்ளன.”

இதைத் தீர்மானிக்க ரயில்வேக்கு ஏன் ஒரு பத்தாண்டு பிடித்தது என்று கேட்டதற்கு, குமார், “முன்னதாக, உத்தராகண்ட் உ.பி.யின் ஒரு பகுதியாக இருந்ததால் உருது இரண்டாவது மொழியாக இருந்ததால், அடையாள அட்டைகளில் உருது பயன்படுத்தப்பட்டது. இதை தற்போது சிலர் சுட்டிக்காட்டிய பின்னர் நாங்கள் இப்போது மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம். ” என்றார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

மூத்த மண்டல வணிக மேலாளர் (டி.சி.எம்) ரேகா சர்மா கூறுகையில், “உத்தராகண்ட் மாநிலத்தில் சமஸ்கிருதம் இரண்டாம் மொழி என்பது சமீபத்தில் எங்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, ரயில் நிலையங்களின் பெயர்கள் சமஸ்கிருதத்திலும் இருக்க வேண்டும். இருப்பினும், சமஸ்கிருதத்தில் நகரங்களின் பெயர்கள் எவ்வாறு எழுதப்படும் என்பதை அறிவது எங்களுக்கு ஒரு கடினமான பணி. ” என்றார்.

டெஹ்ராடூன் ரயில்வேயில் வர்த்தக மற்றும் வரித் துறையைச் சேர்ந்த எஸ்.கே.அகர்வால் கூறுகையில், “இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உள்ள ரயில் நிலையங்களின் சரியான எழுத்துகளைத் தெரிவித்து, எழுத்துப் பிழைகளை நீக்குவதற்காக ரயில் நிலையங்கள் இருக்கும் உத்தராகண்ட் மாநிலத்தின் அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். அவர்களின் பதில்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ” என்றார்.

இருப்பினும், உள்ளூர் சமஸ்கிருத ஆசிரியர், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உள்ள ரயில் நிலையங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்!

இரு மொழிகளும் பொதுவான தேவநாகரி எழுத்துருக்களைப் பயன்படுத்துவதால் இறுதியில் ஒரு ‘எம்’-ஒலிக்குறிப்பு மட்டுமே மாறும். “எனவே, டெஹ்ராடூன்- டெஹ்ராடூனம், ஹரித்வார் – ஹரித்வாரம் மற்றும் ரூர்க்கி – ரூர்கீஹ் ஆகியவையாக மாறும்” என்று சுட்டிக் காட்டுகிறார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

டெஹ்ராடூன், ஹரித்வார், ரூர்க்கி, லக்சர், ரைவாலா, தோய்வாலா, ரிஷிகேஷ் ஆகியவை உருது மொழியில் இருந்து சமஸ்கிருதத்திற்கு மாற்றப்படும் ரயில் நிலையங்களின் பெயர்கள்~

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img