ஏப்ரல் 22 புதன்கிழமை… சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் நகரின் ஒரு பகுதியில் பெருமாள் கோயிலில் தினந்தோறும் பஜனை பாடல் பாடி வரும், குடிசைப் பகுதியைச் சேர்ந்த ஓர் அம்மாவிற்கு, 750 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை கொடுக்க சென்றோம்.
அதை வாங்குவதற்கு முன், அந்தம்மா நம்மிடம் ரூபாய் 1000 பணம் தந்தார். என்ன என்று கேட்ட போது …. இந்த மாதம் எனக்கு கிடைத்த OAP பென்ஷன் பணம் இது . இதை நிவாரணப் பணிக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
நாம் கூறினோம் …. உங்களுக்கே கஷ்டம் …! இந்த சூழ்நிலையில் …. வேண்டாம் … நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னோம் .
அதற்கு அவர், நீங்கள் இதைப் பெற்றுக் கொண்டால்தான் நான் நீங்கள் தரும் மளிகைப் பொருளை வாங்கிக் கொள்வேன் என்றார். மிகவும் பிடிவாதமாக பணத்தை நம்மிடம் தந்தார்.
மேலும் இந்த மாதிரி நல்ல செயலுக்கு என்னையும் அழைத்துச் செல்லுங்கள் நானும் வரேன் என்றார். அந்த அம்மையாரின் பெயர் – இராமாநிதி.
நாம் அந்தப் பணத்தில் அந்தப் பகுதியில் கபசுர குடிநீர் கொடுக்க 500 ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு மீதித் தொகையை அந்தத் தாயாரிடம் ஒப்படைத்து விட்டு வந்தோம்.
–ஆத்தூரில் கொரோனா நிவாரண உதவிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர்கள் கூறியது!