
சர்வதேச யோகா தினம் திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கடைப்பிடிக்கப் பட்டது.
மதுரை, சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் சுவாமி வேதானந்தா தலைமை தாங்கினார் குலபதி அத்யானத்மனந்தா முன்னிலை வகித்தார் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகரன் காமாட்சி ஆகியோர் வரவேற்றனர்.

கல்லூரி முதல்வர் வெங்கடேசன் சர்வதேச யோகா தினத்தை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் உடற்பயிற்சி இயக்குனர் சீனிமுருகன்,யோகா பயிற்சியாளர் இருளப்பன் ஆகியோர் யோகா பயிற்சியை செயல் விளக்கம் செய்து காட்டினர்.
ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பாபு,விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாதவன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன்,கல்லூரி ஆசிரியர்கள், விவேகானந்தாகல்லூரி குடியிருப்பு சிறுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் பின்னர் யோகக் கலை பற்றிய இணையதள கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்து இருந்தன.

இதேபோல் சோழவந்தான் சி.எஸ்.ஐ.தொடக்கப்பள்ளி வளாகத்தில் பதஞ்சலி யோகா மையத்தின் சார்பாக சர்வதேச யோகா தின விழா நடந்தது. இவ்விழாவிற்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன் தலைமை தாங்கினார் டாக்டர் செந்தில்நாதன் மின்வாரிய சுரேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்
முன்னாள் அரிமா சங்கத் தலைவர் தங்கராஜ் வரவேற்றார் பயிற்சியாளர்கள் ஆண்டியப்பன் போதுராஜன் ஆகியோர் யோகா மூலம் பெறும் பயன்கள் குறித்து பேசினார்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள் நாகேந்திரன் நன்றி கூறினார்
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை