மஹாமஹோ பாத்யாய வேதாந்த கேஸரி பைங்காநாடு கணபதி சாஸ்த்ரிகள்!

Published:

painganadu-ganapati-sasthrigal1
painganadu-ganapati-sasthrigal1

மஹா பண்டிதர்; மன்னார்குடி பெரியவர்களின் சீடர். காஞ்சி ஜகத்குரு மஹா பெரியவர்களுக்குப் பாடம் சொன்னவர். இரண்டுமே யாரும் பெறமுடியாத அரிய, பெரிய தகுதிகள், வெள்ளைக்கார அரசு இவருக்கு ‘மஹா மஹோபாத்யாய’ விருதளித்து கௌரவித்தது.

பல நூல்களை எழுதியவர். மணலூர் ஸ்ரீ ராமாநுஜாசார்யர் அவர்களுக்கு உதவியாக மஹாபாரதம் சாந்திபர்வம் தமிழ் மொழிபெயர்ப்பில் உதவியவர். கும்பகோணம் ‘அத்வைத ஸபா’ தலைமை ஏற்று நடத்தினார்.

த்வாரகா பீட சங்கராசார்யர் அவர்கள் நடத்திய மிகப்பெரிய வித்வத் ஸதஸில் அவர் அத்வைதம் தொடர்பான மிக நுட்பமான வினாக்களை எழுப்பினார்; நம் பைங்காநாடுப் பெரியவர் அனைத்துக்கும் மிகத் தெளிவான விடைகளைத் தெரிவித்தார். ‘வேதாந்த கேஸரி’ எனும் விருதையும் சங்கராசார்யர்கள் வாயிலாகப் பெற்றார்.

இவர் எழுதிய ‘தடாதகா பரிணயம்’ மீநாக்ஷி அம்மன் திருக்கலியாண வைபவம் கூறுகிறது. குருவாயூரப்பன் மீதும் துதி நூல்கள் செய்துள்ளார்; பூர்வ மீமாம்ஸை தொடர்பான தலைப்புகளிலும், வேதாந்தத்திலும் அரிய நூல்கள் தந்துள்ளார். தம் இறுதி நெருங்குவதை உணர்ந்து கொண்ட இவர் ஆபத் ஸம்ந்யாஸம் பெற்றார்.

41ம் வயதில் முக்தி பெற்றார். ஒவ்வொரு தலைமுறையிலும், ஒவ்வொரு ஸம்ப்ரதாயத்திலும் இவர் போன்ற மஹான்கள் அவதரித்து ப்ரமாண க்ரந்தங்களுக்குப் புத்துயிரூட்டி ஸநாதநம் நீடிக்க உதவுவர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

மதுஸூதந ஸரஸ்வதிகளின் ‘அத்வைத ஸித்தி’ அன்றும் இன்றும் வேதாந்த மாணவர்களின் ஐயம் நீக்கி உதவி வருகின்றது.

தகவல்: தேவ் ராஜ்

படம்: @venkata

Related articles

Recent articles

spot_img