சுபாஷிதம்: கண்மூடித் தனமாக யாரையும் பின்பற்றக் கூடாது!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

subhashitam
subhashitam

சுபாஷிதம்…. ஸ்பூர்த்தி பதம்!
108 ஞான முத்துக்கள்!
கண்மூடித்தனமாக யாரையும்

பின்பற்றக் கூடாது!

செய்யுள்:,
கதானுகதிகோ லோகோ ந லோக: பாரமார்திக: !
கங்கா சைகத லிங்கேன நஷ்டம் மே தாம்ரபாஜனம் !!

பொருள்:
உலகத்தில் ஒருவர் செல்லும் வழியில் அப்படியே செல்வதைத் தவிர சுயமாக உண்மையை அறியும் முயற்சியை யாரும் செய்வதில்லை. கங்கை நதி தீரத்தில் மணலில் ஒளித்து வைத்த என் செப்புச் சொம்பைக் காணவில்லை.

விளக்கம்:
யாரோ, எதற்கோ, எவ்விதமோ, ஏதோ ஒன்றை செய்யத் தொடங்குவார்கள். ஆட்டு மந்தை போல் ஜனங்கள் அதையே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவார்கள். இதனை கதை வடிவில் குறிப்பால் உணர்த்தும் ஸ்லோகம் இது.

தான் சேர்த்த செல்வத்தை ஒரு செப்புப் பாத்திரத்தில் மறைத்து வைத்து ஒரு சாது காசி நகருக்குச் சென்றார். கங்கை நதியில் இறங்கிக் குளிக்கும் முன்பாக செப்புச் சொம்பை எங்காவது பத்திரமாக மறைத்து வைக்க எண்ணினார்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

நதிக்கரையில் மணலில் புதைத்து வைத்து அடையாளமாக ஒரு மணல் லிங்கத்தை பிடித்து வைத்துவிட்டு நீராடச் சென்றார். அங்கு ஸ்நானம் செய்ய வந்த யாத்திரீகர்கள் அதை பார்த்துவிட்டு இவ்வாறு மணலில் லிங்கம் பிடித்து வைத்து விட்டு குளிக்கச் செல்ல வேண்டும் போலும் என்று நினைத்தார்கள்.

சாது குளித்துவிட்டு கரையேறி வந்து பார்க்கையில் கங்கைக் கரையில் நூற்றுக்கணக்கான மணல் லிங்கங்கள் உருவாகி இருந்தன. அவற்றில் தன் சொம்பை எங்கே என்று தேடுவார்?

காரணம் அறியாமல் கண்மூடித்தனமாக பிறரை பின்பற்றுவது தவறு என்று சுட்டும் ஸ்லோகம் இது.

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

Related articles

Recent articles

spot_img