சிங்கத்தை மயக்கிய பேச்சாளர்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

lion story - 2026

ஒரு பேச்சாளர் காட்டு வழியா போயிட்டிருந்தார். அப்போ ஒரு சிங்கத்துக் கிட்ட மாட்டிக்கிட்டார். சிங்கம் அவரைத் தின்னப் போறதா சொல்லி மிரட்டிச்சு. அவரும் பதறிப் போய், “ஐயோ.. நான் ஒரு பேச்சாளன். நான் பேசறதுக்காக ரொம்ப பேரு காத்திருப்பாங்க. எல்லா ஏற்பாடும் கெட்டுப் போயிடுமே”ன்னு சொல்லி புலம்பினார்.

உடனே சிங்கம், ”ஓ.. நீ பேச்சாளரா? அப்படின்னா உன் பேச்சால என்னை மயக்கு பார்க்கலாம்” அப்படின்னது!

அவர் உடனே, “பெரியோர்களே, தாய்மார்களே, சிங்கங்களே, கரடிகளே”ன்னு ஆரம்பிச்சு ஒரு பத்து நிமிஷம் பேசினார்.

கேட்டுக்கிட்டே இருந்த சிங்கம் திடீர்னு மயக்கம் போட்டு கீழே விழுந்திருச்சி.

பேச்சாளர் ”அப்பாடா தப்பிச்சோம்”னு சொல்லிக் கிட்டே ஓடிப் போனார்.

அவர் அந்தப் பக்கம் போனதும் எழுந்திருச்ச சிங்கம், “அப்பாடா… நல்ல வேளை மயக்கம் போட்ட மாதிரி நடிச்சேன். இல்லன்னா இவன் என்னை பேசியே கொன்னுருப்பான்”னு சொல்லிட்டே காட்டுக்குள்ள ஓடிப் போச்சு.

ஒரு பேச்சு எப்படி இருக்கக் கூடாதுங்கறதுக்கு இந்த சின்னக் கதை ஓர் உதாரணம்.

கதைசொல்லி :- பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

Related articles

Recent articles

spot_img