தமிழக காங்கிரஸைச் சேர்ந்த ஜோதிமணி, தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். தில்லியில் இருந்து கர்நாடக தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய வந்த ராகுல் காந்தி பயணம் செய்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.
பின்னர் ஒருவாறு சமாளித்து விமானத்தை விமானிகள் பத்திரமாக தரை இறக்கினர். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் புகார் கொடுக்க, மத்திய அரசின் விமான போக்குவரத்துத் துறையோ விசாரணைக்கு உத்தரவிட, பிரதமர் மோடியோ உடனே ராகுலுக்கு போன் செய்து விசாரிக்க, இத்தனை பரபரப்புக்கு இடையில், ஜோதிமணி போட்டிருந்த பேஸ்புக் பதிவு பலரையும் சீரியஸில் இருந்து சிரிப்புக்கு மாற்றிவிட்டிருக்கிறது.
அவரது பதிவில், ராகுல் விமான ஓட்டி என்று குறிப்பிட்டுள்ளதுதான் இத்தனை நகைப்புக்கும் காரணம். அவரது பதிவை சமூகத் தளங்களில் பகிர்ந்து, பலரும் பிரித்து மேய்ந்துவிட்டார்கள்.
அவரது பதிவு…
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்ற விமானத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் கோளாறு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ஷ்டவசமாக அவரும் ,உடனிருந்த குழுவினரும் உயிர் தப்பியிருக்கிறார்கள். ராகுல் அவரே ஒரு விமான ஓட்டி என்பதால் அந்த அசாதாரண சூழலில் கொஞ்சம் கூட பதட்டமடையாமல் விமான ஓட்டிகளின் அருகிலிருந்து வழிநடத்தி நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்து, விமானம் அவசரமாக தரையிறங்க உதவியிருக்கிறார். இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மறு மொழி கூறிய ஒரு பதிவு…
.@karthik_klt பொய் சொல்லறதுக்கும் ஒரு அளவில்லையா 😏🤔🤭 .@noyyalan ஆளு என்ன கதை விடுது 🤭😄😄😄🤭 pic.twitter.com/4NAXEJxl4E
— #JusticeForGeetha (@MajorSimhan) April 27, 2018




