வாட்ஸ்அப்… பணம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது…! ஆம் பணம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது..! எப்படி தெரியுமா?
இன்று சமூக ஊடகங்கள் பெருகி விட்டன. மக்கள் தங்களுக்குக் கிடைத்த பொன்னான நேரத்தைப் பொழுதுபோக்கும் நேரமாக மாற்றிக் கொண்டுவிட்டனர். முன்பெல்லாம் பொழுதுபோக்க என்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி வெளியிட சென்று அல்லது உறங்கி, அல்லது வேறு ஏதாவது மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்து பொழுதுபோக்கி வந்தார்கள்.
பத்திரிகைகளில் இருந்து டிவி.,க்களுக்கு மாறிய பொழுதுபோக்கு, பின்னர் மொபைல் போனுக்கு வந்துவிட்டது. இப்போது ஸ்மார்ட் போனே கதி என்று இருக்கிறார்கள். அவர்களின் பெரும்பாலான நேரத்தை இப்போது சாப்பிட்டுக் கொண்டிருப்பது, பேஸ்புக், வாட்ஸ் அப், யுடியூப், டிவிட்டர் இவைதான்…!
இவற்றில் யுடியூப் மூலம் சிலர் பணம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். ஆனால், பேஸ்புக், டிவிட்டர் இவை எல்லாம் படு மோசம். பேஸ்புக் மூலம் எழுத்தாளர்கள் தங்கள் கட்டுரைகளை வெளியிட்டு, சொற்ப வருமானம் பார்த்து வருகிறார்கள். டிவிட்டர் இப்போது தீவிரமாக யோசித்து வருகிறது. ஆனால் வாட்ஸ் அப் மூலம் வருமானம் என்பது பெரும் குதிரைக் கொம்பாகவே இருக்கும்.
இந்த நிலையில், வாட்ஸ் அப் மூலம் உங்கள் வாழ்க்கையில் வளமான வருமானம் அமைய வேண்டுமா? அப்படியென்றால் இதைச் செய்யுங்கள் என்று, உங்கள் மொபைல் போனில் வாட்ஸ்அப் செட்டிங்க்ஸில் இத்தகைய மாறுதலைச் செய்யச் சொல்லி ஒரு செய்தி உலா வருகிறது.
இதைக் கடைப்பிடித்து, இதன்படி நடந்து நீங்களும் நன்றாக வருமானம் பார்க்கலாம். சம்பாதிக்கலாம்தான்…!





