தென்காசி: நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் இன்று சாரல் விழா தொடங்கியது.
குற்றாலத்தில் நடைபெறும் சாரல் திருவிழாவை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜீ, வளர்மதி, ராஜலட்சுமி, எம்.எல்.ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.




