வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுதும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று செங்கோட்டையில் நடந்த தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழகத்தின் மாநில மாநாட்டில் மருத்துவ கழக தலைவர் டாக்டர் அலீம் பேசினார்.
நெல்லை மாவட்டம், செங்கோட்டை குண்டாறு அணை அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழகத்தின் 7-வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பக்கவாதம், மூளை காய்ச்சல், மூளை கட்டி, வலிப்பு நோயின் பாதிப்புகள் குறித்தும் மற்றும் அதற்கான நிவாரணம் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு-பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழக தலைவர் டாக்டர் அலீம் தலைமை தாங்கினார். செயலாளர் அழகேசன் முன்னிலை வகித்தார்.
மாநாட்டில் தமிழ்நாடு – பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழக தலைவர் டாக்டர் அலீம் பேசுகையில் : இந்தியாவில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 மில்லியன். இந்த 12 மில்லியன் பேரில் குழந்தைகள், பெண்கள், ஆண்களும் உள்ளனர்.
இதில் ஒவ்வொருக்கும் பல்வேறு வகையில் பாதிப்புகள் உள்ளது. குறிப்பாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதும் நேரத்தை அதிகப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இது போன்று வேலையில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு ரொம்ப அவசியம். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற நிலை மாறி தற்போது திருமணம் செய்து கொள்ளலாம் என இந்திய அரசின் அறிவிப்புக்கு நன்றி. மாநில அரசை பொறுத்தவரை பெற வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்ளவதாக பேசினார்.
இந்த மாநாட்டில் தமிழகம் மற்றும் பாண்டிசேரியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மூளை நரம்பியல் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.



