சென்னை சிவயோக வேளாண்மை என்ற அமைப்பு சிவயோக விவசாய முறையை வலியுறுத்தி வருகிறது.
சிவயோக ஆசிரமம் நடத்தி வரும் சுவாமி சிவானந்த் தரப்பில் தெரிவிக்கையில்,
சிவயோக விவசாயம் என்பது நம் நாட்டின் தொன்மை வாய்ந்த யோக ஞானத்தை அடிப்படையாக கொண்டது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்பாடு இல்லாத, குறைந்த நீரில் வளமாக உற்பத்தி செய்ய முடியும் என காட்டுவது. குறைந்த செலவில் விளைச்சல், கடன் சுமை இல்லாத விவசாயம், உழவர்களின் உடல், மனம் குடும்பம், பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது.இம்முறையை பின்பற்றுவதால் மண்வளம் செழிக்கும். பயிர்களின் தரம் உயரும். உற்பத்தி அதிகரிக்கும். கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும். அதிக பால் உற்பத்தியாகும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். சீரான பருவகால மாற்றம் ஏற்படும். நீர்நிலை ஆதாரங்கள் மேம்படும். சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படும்.சிவயோக வேளாண் முறை குறித்து ஆன்லைனில் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சியின் நேரடி ஒளிபரப்பு www.shivyogfarming.com என்ற இணையதளத்தில் இன்று மாலை 4:00 மணிக்கு நடக்க உள்ளது. இது மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சக்திபாத தீட்சை. இந்த சக்தியை உள்வாங்கி, செயல்முறையை பின்பற்றி பயன் பெற வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



