தினசரி ஒரு நற்சிந்தனை: வாழ்க்கையும், கணிதமும்..!

Published:

mathsand life - 2026

கணிதம் இந்த உலகத்தில் அக்காலத்திலும் இக்காலத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அறிவு சார்ந்த எல்லா இடங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் கணிதம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த உலகத்தில் நடைபெறும் அனைத்து அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கும் நுணுக்கத்திற்கும் கணிதமே முக்கிய வழி காட்டுதலாகத் திகழ்கிறது.

கணிதம் விஞ்ஞானிகளுக்கு மட்டுமே உரியதல்ல. அது நம் அனைவருக்கும் அவசியமானது.

ஷாப்பிங் செய்கையில், வீட்டை அலங்கரிக்கையில் அல்லது தினசரி வானிலை அறிக்கையைக் கேட்பதில் நீங்கள் கணிதத்தை உபயோகிக்கிறீர்கள் அல்லது அவற்றில் இருந்து பயன் அடைகிறீர்கள்.

கணிதம் உப்பு சப்பில்லாதது, அன்றாட வாழ்க்கைக்கு உதவாதது என்று அநேகர் நினைக்கின்றனர். நீங்களும் அப்படித் தான் நினைக்கிறீர்களா?

கணிதம் எந்தளவுக்கு உபயோகமானதாக, எளியதாக, கவர்ச்சியானதாக இருக்க முடியும் என்பதை இப்போது ஆராயலாம்.

கணிதம் என்பது பொதுவானதொரு மொழியாகும்” நாம் அன்றாட வாழ்வில் சந்திப்பவர்களின் நடவடிக்கைகளைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் ஏதோ ஒன்றில் திறைமைசாலியாகவே, அல்லது ஏதேனும் ஒன்றில் சிறிதளவாயினும் திறைமைசாலியாகவோ இருப்பதை நாம் காணலாம்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

ஆனால்,பொதுவாக கணிதக் கலையானது அனைவரின் அன்றாட வாழ்வில் இணை பிரியாததாக உள்ளது.

கணிதத்தின் அடிப்படைத் தத்துவமானது,

கூட்டல்
கழித்தல்
பெருக்கல்
வகுத்தல்

இந்த நான்கு தத்தவத்தை விழிப்புடன் பயன்படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தை எட்டாக் கனியாகவே வைத்துக் கொள்ளலாம்.எப்படி என்று பார்ப்போம்..

கூட்டல்-

நல்ல பழக்க வழக்கங்களை
மேற்கொள்ளுங்கள்.,

கழித்தல்-

கெட்ட செயல்களைத் தவிருங்கள்..

*பெருக்கல்-

நியாய முறையில் பணத்தை ஈட்டுங்கள். (இதனால் மனமகிழ்ச்சிக்குக் குறைவு இருக்காது..

வகுத்தல்-

காலத்திற்கு ஏற்றாற் போல் நேரத்தைத் திட்டமிடுங்கள்.

இந்த நான்கு கணித அடிப்படையின் விடைகளை சமன் மூலம் வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி தோல்விகளை சமன் செய்யுங்கள்..

ஆம்.,நண்பர்களே..,

இக்கணித இலக்கணத்தை நல்ல வியூகத்துடன் வாழப் பழகிக் கொண்டால், எந்நாளும் பொன்னான நாளாக மாற்றிக் கொள்ளலாம்.

  • அன்புடன் தோழர் கற்பகராஜ்

Related articles

Recent articles

spot_img