பாஜக.,வினரே தயவுசெய்து… சோனியா கட்சி ஒழிகன்னு சொல்லுங்க!

Reporters Diary அடடே... அப்படியா? துணுக்குகள் புகார் பெட்டி

sonia rahul robert priyanka3 - 2026

பா ஜ க வினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! உங்களுக்கு அந்த காலத்து ஒரிஜினல் காங்கிரஸ் மீது ஏதோ ஒரு வகையில் கோவம் இருக்கலாம்!

சோனியாவின் அடிமை கூட்டத்துக்கும் அந்த கால காங்கிரஸுக்கும் சம்பந்தம் கிடையாது! இப்போது இருப்பது 1978 ல் இந்திரா ஆரம்பித்தது!

இந்திரா காங்கிரஸ் என்று அறியப்பட்ட அந்த ஒரு குடும்ப அடிமை கூட்டம் அதிகாரத்தை பயன்படுத்தி 1991 ல் தேர்தல் ஆணையத்தை கைக்குள் போட்டுக்கொண்டு இந்திய தேசிய காங்கிரஸ் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டது!

நீங்கள் காங்கிரஸ் காங்கிரஸ் என்று சொல்லி திட்டினால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும்! ஆனால் மக்கள் மனதில் காங்கிரஸ் காங்கிரஸ் என்றால் காந்தி காமராஜ் போன்றோர் நினைவுதான் வரும்! அதை உங்களால் அழிக்க முடியாது !

ஆகவே நாட்டு நலம் கருதி இந்த ஒரு குடும்ப அடிமைகூட்டத்தை முற்றிலுமாக துடைத்து ஏறிய காங்கிரஸ் காங்கிரஸ் என்று சொல்லுவதை விட்டு விட்டு சோனியா கட்சி என்று சொல்லி வீமர்சனம் செய்யுங்கள் .

புண்ணியமாக போகும். ஜெய்ஹிந்த்!

– ஜெபமணி மோகன்ராஜ் (ஜெபமணி ஜனதா கட்சி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.